"கொரோனா 'டைம்'ல கல்யாணம்,.. யாராலயும் வர முடியல.." அதுக்கென்ன, ஒரு சிறப்பான 'ஐடியா' இருக்கு... அசத்திய 'தம்பதி'... வைரலாகும் 'புகைப்படங்கள்'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா தொற்று உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக அச்சுறுத்தி வரும் நிலையில், இதன் காரணமாக பலரின் திருமணம் தள்ளிப் போயுள்ளது.
மேலும் சிலர், எளிமையான முறையில் மிகவும் குறைவான ஆட்களுடன் திருமணத்தை நடத்தி வருகின்றனர். அதே போல, ஊரடங்கு காலம் என்பதால் மிகவும் வித்தியாசமான முறையிலும் சிலர் திருமணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ரோமானி (Romanee) மற்றும் சாம் (Sam) தம்பதியினர் கடந்த ஜூலை மாதம் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், பொது முடக்கம் காரணமாக உறவினர்கள் யாரும் வர முடியாத நிலை இருந்ததால் திருமணத்தை நடத்த முடியவில்லை. இதன் காரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதம், இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது. மிகவும் குறைவான நபர்கள் மட்டுமே திருமண நிகழ்வில் கலந்து கொள்ள முடியும் என்பதால், மிகவும் வித்தியாசமான முறையில் தங்களது திருமணத்தை ரோமானி மற்றும் சாம் ஆகியோர் நடத்தி முடித்துள்ளனர்.
திருமணத்திற்கு உறவினர்கள் யாரும் வர முடியாத நிலை இருந்ததால், சுமார் 2 லட்சம் ரூபாய் செலவு செய்து உறவினர்களின் கட் அவுட்களை கார்டுபோர்டு அட்டையில் செய்து வைத்து திருமணம் செய்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை அவர்கள் இணையத்தில் வெளியிட, பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
முன்னதாக, மணமகளின் நண்பர் ஒருவர் திருமணத்திற்கு வர முடியாத நிலையில், அவருக்கு பதிலாக அவரின் பேனரை வைத்துக் கொள்ளலாம் என காமெடியாக கூறியதை வைத்து இந்த ஐடியா தோன்றியதாக தெரிவித்தனர். தாங்கள் திருமணத்திற்கு அழைக்க விரும்பிய 100 பேரின் புகைப்படங்களை அனுப்பச் சொல்லி கட் அவுட் செய்து வைத்து திருமணத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கோவையில் 'பெற்றோரின் எதிர்ப்பை மீறி நடந்த காதல் திருமணம்!'.. 3வது நாளில் நடந்த பரபரப்பு சம்பவம்!
- 'எவ்ளோ வெயிட் பண்ணி பாத்தும்'... 'வேற வழி தெரியல'... 'பிரபல நிறுவனத்தின் திடீர் முடிவால்'... 'கலங்கி நிற்கும் ஊழியர்கள்!'...
- 'புதுப்பெண்ணை அருகில் உட்கார வைத்துவிட்டு'.. மடிக்கணியை எடுத்து மாப்பிள்ளை பார்த்த வேலை.. 'தெறிக்கவிட்ட' வைரல் ஃபோட்டோ!
- "பள்ளிகளை திறக்கலாம்.. 'இந்த' வகுப்பு மாணவர்கள் மட்டும் வரலாம்!".. தேதி, பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்த அரசு!
- "சீக்கிரமா வீட்டுக்கு வருவேன்னு அப்பா சொன்னாரு",.. ஆனா 'இறுதி'யில் 'நேர்ந்த' துயரத்தால்... சுக்குநூறான 'குடும்பம்'... தந்தையின் உடலுக்கு இறுதி சடங்கு செய்த 'இளம்பெண்'!!!
- 'கொரோனா கடைசி கிடையாது'... 'அடுத்த பெருந்தொற்றுக்கு'... 'இன்னும் தயாரா இருக்கணும்'... 'முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ள WHO தலைவர்!'...
- "எங்களை அசிங்கப்படுத்துனதுக்கு வாழ்த்துக்கள்",,.. 'மாநகராட்சி'யை எதிர்த்து,, 'பேனர்' வைத்த 'குடும்பம்'... வைரலாகும் சம்பவம்... நடந்தது 'என்ன'???
- 5 மாதங்களுக்கு பிறகு தொடங்கிய வெளியூர்களுக்கான பொதுப் போக்குவரத்து!.. 'இதெல்லாம்' கட்டாயம் கடைபிடிக்கணும்!.. ரயில், பேருந்து சேவைகளில் அதிரடி மாற்றங்கள்!
- "மாப்பிள்ளையை பார்த்ததும்.. கல்லூரி மாணவி சொன்ன பதில்!"... ’மறுநாள் இரவே நடந்த ’அந்த கொடூர சம்பவம்!'.. அதிர்ச்சியில் ‘உறைந்துபோன’ திருமண வீட்டார்!
- 'ஊரடங்கு தளர்வால்'... 'மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுக்கும் அபாயம்'... 'மருத்துவ வல்லுநர்களுடன்'... 'முதலமைச்சர் 'முக்கிய' ஆலோசனை'...!