கடலலையில் தெரிந்த பெண்ணின் முகம்?.. 12 மணி நேரம் காத்திருந்த போட்டோகிராஃபருக்கு சர்ப்ரைஸ்.. வைரல் Pic..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் பல மணி நேரம் காத்திருந்து எடுத்த புகைப்படம் ஒன்று உலக அளவில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

Advertising
>
Advertising

                                            Image Credit : Ian Sproat

Also Read | "2 பந்து வீசுற வரை பொறுமையா இருக்க கூடாதா?".. சுப்மன் கில் செஞ்ச வேலை.. கடுகடுத்த கவாஸ்கர்..!

புகைப்படங்கள் மீதான ஆர்வம் எப்போதும் மக்களுக்கு குறைவதில்லை. சாதாரண நிகழ்வுகளை கூட புதிய கோணத்தில் இருந்து அணுகுவது, இயற்கை அதன் மீது நிகழ்த்தும் மாற்றத்தை தத்ரூபமாக படம் பிடிப்பது என பலவிதத்தில் சவாலான காரியம் புகைப்படங்கலை. சில நேரங்களில் கச்சிதமான ஒரு புகைப்படத்திற்காக பல மணி நேர கணக்கில் காத்திருக்க வேண்டும். இன்னும் சில நேரங்களில் எதேச்சையாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உலக அளவில் பிரபலம் ஆவதும் உண்டு. அந்த வகையில் இங்கிலாந்தை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் 12 மணி நேரம் காத்திருந்து எடுத்த புகைப்படங்களுள் ஒன்று உலக அளவில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Image Credit : Ian Sproat

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் இயான் ஸ்ப்ராட். புகைப்பட கலைஞரான இவருக்கு 41 வயது ஆகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று இயான் சுந்தர்லாந்தில் ரோக்கர் பையர் கலங்கரை விளக்கத்திற்கு சென்றிருக்கிறார். கடல் அலைகள் மோதி தெறிக்கும் அழகை படம்பிடிக்க நினைத்த இயான் அங்கேயே காத்திருந்திருக்கிறார். ஒவ்வொரு அலையும் எப்படியெல்லாம் அந்த கலங்கரை விளக்கத்தின் மீது பட்டு தெறிக்கும் போது உருவம் கொள்கிறது என்பதை படம்பிடித்தபடி இருந்துள்ளார்.

Image Credit : Ian Sproat

இப்படி 12 மணி நேரம் செலவிட்டு 4000 புகைப்படங்களை அவர் எடுத்திருக்கிறார். அவற்றுள் ஒரு புகைப்படம் அவரையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அப்படி என்ன விசேஷம்? இருக்கிறது. அந்த கலங்கரை விளக்கத்தின் மீது பட்டு தெறித்த கடலலை ஒன்றில் பெண்ணின் முகம் போல இருந்திருக்கிறது. இதனால் இயான் ஆச்சர்யமடைந்திருக்கிறார்.

இந்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து,"அலைகளில் முகங்கள், அது நீரின் தெய்வம் ஆம்பிட்ரைட்டாக இருக்கலாம் அல்லது நம் அன்புக்குரிய மறைந்த ராணி எலிசபெத் ஆக இருக்கலாம்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த புகைப்படம் தற்போது உலக அளவில் வைரலாகி வருகிறது.

Also Read | ஒரே நாளில் 3 நிறங்களுக்கு மாறும் சிவலிங்கம்?.. பல்லாண்டு பழமையான கோவிலில் தினந்தோறும் நடக்கும் அதிசயம்..?

PHOTOGRAPHER, UK PHOTOGRAPHER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்