வயாகரா கொடுத்த வாழ்க்கை..! கோமாவிற்கு சென்று உயிர்பிழைத்த அதிசயம்.. திகைத்து போன மருத்துவர்கள்
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டன்: பிரிட்டனில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு 28 நாட்களாக கோமாவில் இருந்த செவிலியரை மருத்துவர்கள் வயாகரா மருந்து கொடுத்து காப்பாற்றிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ என்பது மிகவும் விஞ்ஞானம் கவர்ச்சிகரமானது, அது சில சமயங்களில் பல ஆச்சரியங்களை நிகழ்த்தக் கூடியது. அந்த வகையில் பிரிட்டனில் நடந்த ஆச்சரியமான சம்பவத்தில் ஒரு உயிரை காப்பாற்றியுள்ளனர்.
கோவிட்-19 கோமாவில் 28 நாட்கள் கழித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு செவிலியருக்கு, பரிசோதனை சிகிச்சையின் ஒரு பகுதியாக மருத்துவர்கள் வயாகராவை கொடுத்த நிலையில், அவர் அதிசயமான முறையில் குணமடைந்து உள்ளார். இதனைக் கண்ட அவரது உறவினர்கள் ஆச்சரியமடைந்தனர்.
ருசி மற்றும் வாசனை இழப்பு:
இங்கிலாந்தில் உள்ள லிங்கன்ஷையரைச் சேர்ந்த 37 வயதான மோனிகா அல்மெய்டா, நவம்பர் 9-ஆம் தேதி அன்று மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது, கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருந்த நிலையிலும், அவர் ருசி மற்றும் வாசனையை இழந்து, கடுமையான இருமல் இருந்த போதிலும் ரத்தம் வந்துள்ளது.
சுயநினைவு இன்றி கோமா:
அதன்பிறகு, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவரது உடல்நிலை தீவிரமாக மோசமடைந்ததது. ஒரு வாரம் கழித்து, அவர் தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்ட நிலையில், நவம்பர்-16 அன்று சுயநினைவு இன்றி கோமா ஆனார். அதன்பிறகு, அவர் கோமாவில் இருந்து கண்விழித்தபோது, அவர் ஒப்புக்கொண்ட பரிசோதனைச் சிகிச்சைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அவருக்கு அதிக அளவு வயாகரா கொடுக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வயாகரா:
ரத்த தமனிகளின் சுவர்களைத் தளர்த்துவதன் மூலமாக, விறைப்புச் செயலிழப்புக்கான மருந்தான வயாகரா உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் அதிக இரத்தத்தைச் சுற்ற அனுமதிக்கிறது. அவர் டிசம்பர்-14 அன்று கோமாவில் இருந்து திடீரென எழுந்தார், மேலும் வீட்டிற்குத் செல்ல அனுமதிக்கப்பட்டார். மோனிகா அல்மெய்டா ஒரு புதிய மருத்துவ சோதனை முயற்சியின் பலனாக உயிர்பிழைத்தார். இந்த சம்பவம் அனைவரிடையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் தமிழகத்தில் இ-பாஸ் முறை அமலுக்கு வரப்போகிறதா..? பழையபடி டார்ச்சர் செய்யும் கொரோனா!
- 11 தடவை கொரோனா தடுப்பூசி போட்ட தாத்தா.. ப்ளீஸ் போட்டுக்கிட்டே இருங்க.. ரொம்ப பிடிச்சிருக்கு.. கொரோனா தடுப்பூசி மேல் காதல்
- தோல், நகம், உதடுகளைக் கவனியுங்கள்.. இதெல்லாம் இருந்தால் ஒமிக்ரானாக இருக்கலாம் – மருத்துவர்கள் வெளியிட்ட புதிய தகவல்..!
- ஒமைக்ரான் பாதித்தவர்களுக்கு ஆக்சிஜன் உதவி தேவைப்படுகிறதா..? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்..!
- நைட் 10 மணிக்கு மேல ‘வெளியூர்’ கிளம்புறீங்களா..? அப்போ மறக்காம இதெல்லாம் ‘ஃபாலோ’ பண்ணுங்க..!
- தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு.. சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு..!
- பேராபத்து.. ஓமிக்ரான் தொற்றே இன்னும் முடியல.. அதற்குள் பல வேரியண்ட்டா? WHO வார்னிங்
- வண்டிய நிறுத்துங்க.. காரிலிருந்து இறங்கிச் சென்று முதல்வர் செய்த செயல்..!
- நாளை முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்.. வரப்போகுது புதிய அறிவிப்பு
- ஒமைக்ரான் வந்தால் என்ன செய்யும்.. எலிகளால் தெரிய வந்த 3 உண்மைகள்!