ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனையில் 'ரிஸ்க்' எடுத்த ஒரே 'இந்தியர்'!!... "வேணாம்டா, கொரோனா வரும்ன்னு எல்லாம் சொன்னாங்க"... ஆனா நான் கொஞ்சம் கூட பயப்படல... இங்கிலாந்தில் மாஸ் காட்டிய 'இந்தியர்'!!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த வேண்டி உலகிலிலுள்ள பல நாடுகள் மிகவும் மும்முரமாக அதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்த நிலையில் அதற்கான சோதனையில் வெற்றியும் கண்டிருந்தது. இந்த தடுப்பு மருந்தினை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் சோதனை நடத்திய நிலையில், தடுப்பு மருந்து சிறந்த முடிவை தந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த 1000 பேரில் தன்னார்வலராக இந்தியர் ஒருவர் பங்கெடுத்துள்ளார். ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்து சோதனையில் பங்கெடுத்த ஒரே இந்தியர் இவர் மட்டும் தான்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தீபக் பலிவால் என்பவர், கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மருந்து ஆலோசகரான தீபக், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கோவிட் -19 தடுப்பூசி சோதனைக்கு தன்னார்வலராக கையெழுத்திட்டுள்ளார். இதனை அறிந்த அவரது மனைவி, குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். 'எனது முடிவை முதலில் யாரும் ஏற்கவில்லை. பொதுவாக, தடுப்பு மருந்துகள் விலங்குகளில் சோதனை செய்யப்படும் என்பதால், மனிதனாக சோதனை முயற்சியை மேற்கொள்ள வேண்டாம் என கூறினர். ஆனால், இந்த தொற்று நோயை எதிர்த்து போராட என்னாலான உதவியை செய்ய வேண்டும். என் உயிரை தியாகம் வைத்தாவது இந்த காரியத்தை செய்ய வேண்டும் என முடிவு செய்திருந்தேன்' என்றார்.

தீபக் பலிவால், ChAdOx1 n CoV-19 என்ற தடுப்பூசி மருந்துக்கான அடுத்தடுத்த இரண்டு சோதனையில் தன்னை உட்படுத்திக் கொண்டார். தொடர்ந்து சில தினங்களுக்கு முன், இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவரது உடலில் தற்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. இதுகுறித்து தீபக் கூறுகையில், 'தடுப்பு மருந்து சோதனை வெற்றி பெற்ற தகவலறிந்த எனது மனைவி, தொடக்கத்தில் பயப்பட்ட நிலையில், தற்போது என்னை நினைத்து மிகவும் பெருமை கொண்டார். தடுப்பு மருந்து சோதனைக்கு உட்படுத்திக் கொண்டால் குழந்தை பிறப்பதில் பிரச்சனை ஏற்படும் என்றும் சிலர் எச்சரித்தனர். அதே போல, தடுப்பூசியால் தூண்டப்பட்ட ஆன்டிபாடிகளுக்கு மத்தியில், கொரோனாவால் எனக்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் எனக்கு தெரிந்த ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள். ஆனாலும், எந்தவித பிரச்சனையும் இல்லாமல் தற்போது சாதகமான முடிவு வந்துள்ளது' என அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்