கொரோனா உயிரிழப்புக்கு 'இவையும்' காரணமாக இருக்கலாம்... 'இந்திய' வம்சாவளி பிரிட்டன் மருத்துவர் 'எச்சரிக்கை'...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா உயிரிழப்புக்கு ஆரோக்கியமற்ற உணவு முறையும் காரணமாக இருக்கலாம் என மருத்துவர் அசீம் மல்ஹோத்ரா எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு காரணம் அவர்களுடைய ஆரோக்கியமற்ற உணவு முறையே என இந்திய வம்சாவளி பிரிட்டன் மருத்துவர் அசீம் மல்ஹோத்ரா எச்சரித்துள்ளார். அதனால் இந்தியர்களும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். நவீன முறையில் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் நீண்ட நாட்களுக்கு கெடாமல் பாதுகாக்க கூடுதல் ரசாயனங்கள் சேர்க்கப்படுவதுடன், கொழுப்பு, சர்க்கரை, ஸ்டாட்ச்கள் ஆகியவையும் அதிகமாக சேர்க்கப்படுகின்றன. இவை புற்று நோய்களுக்கு வழிவகுக்கும் என ஏற்கெனவே ஆய்வுகள் எச்சரித்துள்ள நிலையில், கொரோனா பாதிப்புக்கு எதிராக போராடவும் இதுபோன்ற உணவுகளால் உடலுக்கு போதிய வலு கிடைக்காது என அசீம் மல்ஹோத்ரா கூறியுள்ளார்.
இதுகுறித்துப் பேசியுள்ள அவர், "இந்தியாவில் டைப் 2 நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இருதய நோய்கள் போன்ற வாழ்க்கைமுறை சார்ந்த நோய்கள் அதிகம் ஏற்படுகின்றன. குறிப்பாக இந்த நோய்கள் தான் கொரோனா பாதிப்பின்போது உயிரிழப்பை ஏற்படுத்துகின்றன. ஆரோக்கியமான எடை என்ற ஒன்று கிடையாது, ஆரோக்கியமான மனிதர் என்பதே உண்டு. ஆரோக்கியமான வாழ்க்கை மூலம் இந்த மெட்டபாலிக் சுகாதார அளவுகோல்களைப் பராமரித்தால் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளலாம். மேலும் இந்தியர்கள் அதிகமாக கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக் கொள்வதால் குளூக்கோஸ் அதிகரித்து டைப் 2 சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இதைக் குறைக்க நாம் வெறும் காய்கறிகள், பழங்கள், ரெட் இறைச்சி, முட்டைகள், மீன்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்” எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- திரும்பி வந்ததும்... தெறிக்கவிட்ட 'கிம்'!.. கொரியா எல்லையில் பரபரப்பு!.. என்ன நடந்தது?
- ஒரே தெருவைச் சேர்ந்த 54 பேருக்கு கொரோனா!.. சென்னையில் வைரஸ் வேகமெடுத்தது எப்படி?.. பதறவைக்கும் பின்னணி!
- கொரோனா சூழலுக்கு தகுந்தவாறு திட்டமிடுவது எப்படி?.. 'நடப்புக் கல்வியாண்டு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் இல்லை!'... அதிரடியாக அறிவித்த அரசு!
- 'அவங்க போராடி ஜெயிச்சிருக்காங்க...' 'இந்த விஷயத்துல அவங்கள பார்த்து கத்துக்கணும்...' உலக சுகாதார நிறுவனத்தால் மீண்டும் கடுப்பான அமெரிக்கா...!
- 'சென்னையில் ஒரே தெருவில் 40 பேருக்கு கொரோனா...' 'அதுவும் ஒரே குடும்பத்துல மட்டும் 12 பேருக்கு...' 'இங்க மட்டும் ஏன் வேகமா பரவுது...'
- 'அபார்ட்மெண்ட்டில் ஸ்கிரீனிங்!'.. 'பால்கனியில் ஆடியன்ஸ்!'.. ஊரடங்கில் புதுமையான பொழுதுபோக்கு!
- VIDEO :'முப்பது' நாட்கள் அயராது 'உழைப்பு'... பணிமுடிந்து திரும்பிய 'பெண்' மருத்துவருக்கு... 'அசத்தல்' வரவேற்பு... ஆனந்த கண்ணீரால் நன்றி சொன்ன மருத்துவர்!
- 'இனிமேல் சின்ராச கையிலயே பிடிக்க முடியாது'... 'ஜாலி மூடில் சீனர்கள்'...ஓஹோ இது தான் காரணமா!
- 'கொரோனா' எங்க மேல ஏன் இவ்வளவு கோபம்'?... 'யாருக்கு யார் ஆறுதல் சொல்றது'...'நொறுங்கி போன அமெரிக்கா'... 'ஒரே நாளில் புரட்டி போட்ட பலி'
- 'பொண்ண எம்.பி.பி.எஸ் ஆக்கணும்' ... 'டெய்லர் தந்தையின் வைராக்கியம்'.... 'ஒரு நொடியில் தகர்ந்த மொத்த கனவு'... நொறுங்கி போன குடும்பம்!