"வீட்டில் கரண்ட் கட்" என புகாரளித்த நபர்.. 234 லட்சம் கோடியை இழப்பீடாக கொடுத்த மின்வாரியம்.. என்னதான் நடந்தது?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்தில் தனது வீட்டில் கரண்ட் கட் ஆனதால், தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மின்சார வாரியத்திடம் கோரிக்கை வைத்திருந்த நபருக்கு 23,49,02,91,00,00,000 ரூபாய் (சுருக்கமாக 234 லட்சம் கோடிகள்) க்கான செக்கை அளித்திருக்கிறது மின்சார வாரியம். இது இணையத்தில் பலரையும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

மிடில் கிளாஸ் பெண்கள் தான் டார்கெட்.. இதுவரை 14 பெண்கள்.‌.. சிக்கிய 54 வயது மன்மதன்?

அர்வென் புயல்

ஐரோப்பாவில் கடந்த ஆண்டு மிகப்பெரிய சேதத்தினை ஏற்படுத்திய அர்வென் புயல் அளித்த சுவடுகள் இன்னும் மிச்சமிருக்கின்றன. நவம்பர் 26 மற்றும் 27 ஆம் தேதி இங்கிலாந்து, அயர்லாந்து, பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளில் இந்தப் புயல் வீசியது. மணிக்கு சுமார் 140 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்று காரணமாக 3 பேர் உயிரிழந்ததாக இங்கிலாந்து அரசு தெரிவித்திருந்தது. மேலும், ஒட்டுமொத்த இங்கிலாந்திலும் மின்சார பகிர்மான கட்டுமானங்கள் பலத்த சேதமடைந்ததால் நாடே இருளில் மூழ்கியது.

கரண்ட் கட்

இந்நிலையில் இங்கிலாந்து உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதற்காக பொதுமக்கள் இழப்பீடு கோரலாம். அந்நாட்டு மின்சார வாரியம் அதற்கு நடவடிக்கை எடுத்து, தேவை ஏற்படின் இழப்பீடை வழங்கும். அப்படி, அர்வென் புயல் காரணமாக தனது வீட்டில் கரண்ட் கட் - ஆனதாக கெரேத் ஹ்யூஸ் என்பவர் மின்சார வாரியத்திற்கு கடிதம் அனுப்பி இழப்பீடும் கேட்டிருக்கிறார்.

234 லட்சம் கோடி

கெரேத் ஹ்யூஸ்-ன் கோரிக்கையை ஏற்ற மின்சார வாரியம் அவருக்கு இழப்பீட்டுக்கான செக்கை அனுப்பியிருக்கிறது. ஆனால், அந்த செக்கில் இழப்பீட்டுத் தொகையாக 234 லட்சம் கோடி குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் அந்த செக்கின் புகைப்படத்தை வெளியிட்ட கெரேத் ,"அர்வென் புயலால் மின்வெட்டு ஏற்பட்டதற்காக எனக்கு இழப்பீடு அளித்ததற்கு நன்றி, இதை நான் பேங்கில் கொடுப்பதற்கு முன், இவ்வளவு பெரிய தொகையை எனக்கு உங்களால் உண்மையிலேயே தரமுடியுமா?" எனக் கேட்டிருந்தார்.

பதில்

கெரேத்-ன் கேள்விக்கு பதிலளித்த நார்த் பவர் க்ரிட், "வணக்கம் கெரேத், இதனை எங்கள் பார்வைக்கு கொண்டு வந்ததற்கு நன்றி. உங்களது முகவரி, பெயர், கணக்கு விவரங்களை எங்களுக்கு அனுப்பவும், கூடிய விரைவில் அதனை சரி செய்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தது.

டிவிட்டரில் கெரேத்தின் செக் புகைப்படத்தை பார்த்தவர்களில் சிலர் தங்களுக்கும் இதுபோலவே குளறுபடிகள் நடந்ததாக கமெண்ட் செய்திருந்தனர். இன்னும் ஒரு சிலர் "உடனடியாக செக்கை பேங்கில் போட்டு காசை பெறுங்கள்" என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதென்னடா தங்கத்துக்கு வந்த அதீத மவுசு.. தென்னை மரத்துல தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டுற கதையால்ல இருக்கு!

UK ELECTRICITY BOARD, MAN, POWER CUT, கரண்ட் கட், மின்வாரியம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்