ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜெனெகாவின் கொரோனா தடுப்பூசிகள் எப்போது ‘பயன்பாட்டுக்கு’ வரும்?.. இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி தகவல்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகம் முழுவதும் 4 கோடி பேருக்கும் மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதுடன், 10 லட்சம் பேருக்கு மேல் உயிரிழந்துமுள்ளனர். இங்கிலாந்தில் தற்போது 7 லட்சத்துக்கும், அதிகமானோர் கொரோனாவால், பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 43.5 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில்தான் கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசியை உலக நாடுகள் கண்டுபிடிக்கும் முனைப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், கிறிஸ்துமஸுக்குப் பிறகு இங்கிலாந்தில் தடுப்பூசி தயாரிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்து அரசாங்கத்தின் ஆலோசகர்களில் ஒருவராகவும், இங்கிலாந்தின் துணை தலைமை மருத்துவ அதிகாரியுமான ஜொனாதன் வான்-டாம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி மற்றும் அஸ்ட்ராஜெனெகாவால் தயாரிக்கப்படும் தடுப்பூசி கிறிஸ்துமஸுக்குப் பிறகு தயாரிக்கப்படலாம்  என்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.

இதுபற்றி பேசிய ஜொனாதன் வான் டாம், “அனைத்து தடுப்பூசிகளும் 3 கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், நோயாளிகளுக்கு வழங்கப்படுவதற்கு முன்னர், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் கட்டுப் பாட்டாளர்களால், அவை மதிப்பிடு செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்