ஹேங் ஓவரா?... தாராளமா 'லீவ்' எடுத்துக்கங்க... இன்ப 'அதிர்ச்சியளித்த' நிறுவனம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அத்தியாவசியமான தேவைகளுக்கே ஆபிஸில் லீவ் கொடுப்பார்களா? இல்லையா? என்று ஆயிரம் முறை நாம் யோசிப்போம். ஆனால் இங்கொரு கம்பெனியில் ஹேங் ஓவர் என்றால் தாராளமாக விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள் என கூறியிருக்கின்றனர்.

இங்கிலாந்தில் உள்ள ஆடிட் லேப் என்ற டிஜிட்டல் மார்கெட்டிங் நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு 'ஹேங் ஓவர் ஹாலிடேஸ்' என்ற விடுமுறையை வழங்குகிறது. அதன்படி ஊழியர்கள் முன்தினம் இரவு அதிகமாகக் குடித்துவிட்டால் அவர்கள் மறுநாள் காலையில் 'வொர்க் ப்ரம் ஹோம்' அதாவது வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் வாய்ப்பை எடுத்துக்கொள்ளலாம்.

இல்லை என்றால் அன்றைய தினம் விடுமுறையாக எடுத்துக் கொள்ளலாம். மேலும் முன்னரே பார்ட்டி குறித்து தெரிந்தால் முன்கூட்டியே ஆபிஸில் சொல்லி லீவ் வாங்கி வைத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. எனினும் ஒரு ஊழியர் அதிகமாக ஹேங் ஓவர் லீவ் எடுப்பது தெரிந்தால், அவரின் விடுமுறையை ரத்து செய்யவும் நிறுவனம் தயங்காதாம். எது எப்படியோ, இதனால் ஊழியர்கள் தற்போது மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனராம்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்