'விடுதலைப் புலிகள் மீதான தடை உடைந்தது'!.. இங்கிலாந்து நீதிமன்றம் 'அதிரடி' தீர்ப்பு!.. தடை நீங்கியது எப்படி?.. தீர்ப்பின் பின்னணி என்ன?
முகப்பு > செய்திகள் > உலகம்விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான இங்கிலாந்தின் தடை தவறானது என்று அந்த நாட்டின் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பான சிறப்பு ஆணையம் அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது.
இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடைக்கு எதிராக 2018-ல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கடிதம் அனுப்பியது.
இங்கிலாந்தின் உள்துறை செயலாளர் சஜித் ஜாவித் எம்.பி.க்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டது. இக்கடிதத்தை 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அவர் நிராகரித்தார். இதனையடுத்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிராக மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்தது.
இங்கிலாந்தில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான சிறப்பு ஆணையத்தில் (Proscribed Organisations Appeal Commission) இந்த மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில், புலிகள் இயக்கம் இப்போது பயங்கரவாதத்தில் தொடர்புடையவர்கள் என நம்புவதற்கான நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சார்பில் வாதிடப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சிறப்பு ஆணையம், விடுதலை புலிகள் இயக்கம் மீதான இங்கிலாந்தின் தடை தவறானது என அதிரடி தீர்ப்பை வழங்கியது. மொத்தம் 38 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் விடுதலை புலிகள் மீதான தடை தவறானது என கூறப்பட்டுள்ளது.
இதனால், இங்கிலாந்தில் விடுதலை புலிகளுக்கு எதிரான தடை விரைவில் நீங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எப்படியாவது இந்த கொரோனாவ ஒழிச்சா போதும்'... 'பெரும் Risk-ஐ கையிலெடுக்கும் நாடு!!!'... 'கண்டிப்பாக பலனளிக்குமென ஆய்வாளர்கள் நம்பிக்கை!'...
- ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜெனெகாவின் கொரோனா தடுப்பூசிகள் எப்போது ‘பயன்பாட்டுக்கு’ வரும்?.. இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி தகவல்!
- ‘மௌனம்’ கலைத்த ‘விஜய் சேதுபதி’! முத்தையா முரளிதரனின் ‘பரபரப்பு’ அறிக்கை வெளியான சில நிமிடங்களிலேயே.. விஜய் சேதுபதி போட்ட வைரல் ‘ட்வீட்!’
- “பணக்காரங்க வீட்டு பொண்ணா இருந்தா.. இப்படி சொல்லாம உடல் தகனம் செய்வீங்களா?”.. ஹத்ராஸ் வழக்கில் ‘உ.பி உயர்நீதிமன்றம்’ சரமாரி கேள்வி!
- 'கடுமையான விதிமீறலால்'... 'குவாரண்டைனுக்கு உள்ளான CSK வீரர்'... 'இப்படியே போனா போட்டியிலிருந்தே தடை தான்!!!'...
- “ஹாலிவுட் படங்களில் மட்டுமே பரவசப்படுத்திய சூப்பர் ஹீரோக்கள்.. இனி நிஜத்திலும்!”.. ஆச்சர்யத்தில் ஆழ்த்திய தொழில்நுட்ப சாதனை!
- 'அவங்க மேஜர்...' ஸோ அதெல்லாம் தப்பில்ல...! 'என்ன தொழில் விருப்பமோ அந்த தொழில பண்ணலாம்...' - மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு...!
- "அடுத்த 6 மாசம் அள்ளு விடப் போகுது!.. முடிஞ்சா இத பண்ணுங்க".. 'மீண்டும்' வேலையை காட்டும் 'கொரோனா'!.. அப்படியே 'அந்தர் பல்டி' அடித்த 'நாடு'!
- 'இருக்கு.. இன்னும் கொஞ்ச நாள்ல இதை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்!!'.. நாட்டு மக்களை எச்சரித்த சுகாதார செயலர்!
- 'இந்த மேட்டர தென்னை மர உச்சியில வச்சு...' 'மக்கள் கிட்ட சொன்னா தான் கரெக்ட்டா இருக்கும்...' - தென்னை மரத்தில் ஏறிய 'அந்த' நாட்டு அமைச்சர்...!