'81 வயது மூதாட்டியை திருமணம் செய்த இளைஞர்'... 'எங்க காதல் தெய்வீகமானது'... ஆனா, இருவரையும் பிரித்த விசித்திர காரணம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

"காதலுக்கு கண் இல்லை" என்ற பழமொழி உண்டு. ஆனால், காதலுக்கு வயதும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், 81 வயது மூதாட்டியும், 36 வயது இளைஞரும் ஒருவர் மீது ஒருவர் தீராத காதலைக் கொண்டுள்ளனர். இந்த தம்பதியின் இணை பிரியா அன்புக்கு தற்போது ஒரு சிக்கல் வந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஐரிஸ் ஜோன்ஸ் (வயது 81). அவர், எகிப்து நாட்டைச் சேர்ந்த மொஹமத் என்ற 36 வயது வாலிபரை கடந்த 2019 ஆண்டு ஃபேஸ்புக்கில் சந்தித்துள்ளார்.

இருவரும் நல்ல நண்பர்களாக பேசத் தொடங்கி, நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது.

அதைத்தொடர்ந்து, கடந்த 2019ம் ஆண்டு நவம்பரில், எகிப்தில் உள்ள தனது காதலன் மொஹமத்தை சந்திக்க மூதாட்டி ஐரிஸ் இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஏர்போர்ட்டில் ஐரிஸ் ஜோன்ஸை வரவேற்க சென்ற மொஹமத், அவரை முதல் முறையாக நேரில் பார்த்ததும், தன்னுடைய வாழ்க்கை துணை ஐரிஸ் தான் என முடிவு செய்துவிட்டார்.

இதுகுறித்து, மொஹமத் கூறியபோது, "இப்படி ஒரு பெண்ணை என் காதலியாக பெற்ற நான் மிகவும் அதிர்ஷ்டசாலி" என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

அந்த தருணத்தில் இருந்தே, ஐரிஸும் மொஹமத்தும் தம்பதிகளாக வாழத்தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில், ஐரிஸ் ஜோன்ஸின் 54 வயதான மகன் ஸ்டீஃபன், இவர்களின் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஐரிஸ் குடும்பம் இரண்டாக உடைந்தது.

எனினும், மொஹமத் மீது கொண்ட அதீத காதலால், ஐரிஸ் தனது முடிவில் உறுதியாக நின்றுள்ளார்.

இதற்கிடையே, கொரோனா தொற்று காரணமாக, காதல் தம்பதியினர் பிரிந்து வாழ்ந்து வந்தனர். ஆனால், இப்போது கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், அவர்களுக்கு புதிதாக ஒரு சிக்கல் உருவாகியுள்ளது.

இங்கிலாந்து நாட்டுக்குச் செல்ல மொஹமத்துக்கு விசா கிடைக்கவில்லை. இதனால், தம்பதியினர் மேலும் சில காலம் பிரிந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஐரிஸ் மற்றும் மொஹமத்துக்கு இடையே 45 வயது இடைவெளி உள்ளது. சிலர் அவர்களின் காதலை கொச்சை படுத்தி விமர்சனம் செய்தாலும், அவற்றை அவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை.

பல தடைகளை கடந்து நிலைத்த இவர்களின் காதல், மீண்டும் வெல்லுமா?.. பொறுத்திருந்து பார்ப்போம்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்