'வாட்ஸ்அப், ஃபேஸ்புக் ரெண்டையுமே BAN பண்றோம்...' 'எலக்சனுக்கு ரெண்டே நாள் தான் இருக்கும் நிலையில்...' - அதிரடியாக அறிவித்த நாடு...!
முகப்பு > செய்திகள் > உலகம்அதிபர் தேர்தலுக்காக பேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகங்களையும் தடை செய்துள்ளதாக உகாண்டா அரசு உத்தரவிட்டுள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் வரும் வியாழனன்று அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 1986 முதல் தேசிய எதிர்ப்பியக்கத்தின் தலைவர் யோவெரி முசெவெனி (76) என்பவரே நீண்ட ஆண்டுகள் அதிபராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போதைய எதிர்கட்சித் தலைவர்களில் முசெவெனிக்கு கடும் போட்டி அளிப்பவராக 38 வயதான பிரபல பாடகர் பாபி வைன் உருவாகியுள்ளார். மேலும் இன்றைய மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் இளைஞர்கள். சராசரியாக 30 வயதுக்குள்ளானவர்கள். அவர்களில் பெரும் கூட்டம் 'புதிய உகாண்டா' என்ற பிரசாரத்துடன் பாபியை பின்தொடர்கிறது.
தற்போது இணையதள சேவை வழங்குபவர்களுக்கு அந்நாட்டு தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது. அதில் மறு உத்தரவு வரும் வரை பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட மெசேஜிங் செயலிகள் அனைத்தையும் தடை செய்யும் படி கூறப்பட்டுள்ளது.
அதற்கான காரணம் என்னெவேன்று விசாரிக்கையில், அந்நாட்டில் பெரும்பாலான ரேடியோ மற்றும் தொலைக்காட்சிகள் அரசு ஆதரவாளர்களுக்கு சொந்தமானவை எனவும், முக்கிய தினசரி அரசால் நடத்தப்படுகிறது.
இதனால் எதிர்க்கட்சித் தலைவர் பாபி வைன் பல ஊடகங்கள் தங்கள் பிரசாரத்தை ஒளிபரப்புவதில்லை என கூறிவருகிறார். மேலும் பாபி வைன் தனது பிரச்சாரங்கள் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பை பேஸ்புக் மூலம் நேரடியாக ஒளிபரப்பி வந்தார். இந்நிலையில் தான் எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை தடுக்கும் விதமாக சமூக ஊடகங்களுக்கு தேர்தலுக்கு இரு நாள் முன்பு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உகாண்டாவின் தற்போதைய அரசு.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘புதிய பிரைவேசி பாலிசி சர்ச்சை’.. “100% தெளிவாகுங்கள்.. எங்க நோக்கம் இதுதான்!” - WhatsApp-ன் அதிகாரப்பூர்வ விளக்கம்!
- அதிரவைக்கும் 'வாட்ஸ் அப்'-இன் புதிய ரூல்ஸ்!.. புரியாமல் மாட்டிக் கொள்ளும் பயனாளர்கள்!.. 'பிப்ரவரி 8'க்கு பின் என்ன நடக்கும்?.. விரிவான தகவல்!
- ‘பேஸ்புக்கில் ஃப்ரண்ட் ரிக்வஸ்ட்டை ஏற்காத முன்னாள் முதலாளி!’ - ஆத்திரமடைந்த வாலிபர் செய்த ‘மிரள வைக்கும்’ காரியம்!
- வாட்ஸ் அப்-இல் அதிரடி மாற்றங்கள்!.. ''இந்த' நிபந்தனைகள நீங்க ஏற்கலனா... 'உங்க' அக்கவுண்ட் நீக்கம் செய்யப்படும்'!.. பரபரப்பு தகவல்!
- 'புதுமண பெண்ணுக்கு வந்த பல தொலைப்பேசி அழைப்புகள்'... 'அதில் பேசியவர்கள் கேட்ட கேள்வி'... 'உடைந்து நொறுங்கிய இளம்பெண்'... வெளிவந்த கணவனின் கோர முகம்!
- பேஸ்புக்கில் காதலித்து ‘கல்யாணம்’.. எதர்ச்சையாக கணவர் வாட்ஸ்அப் DP-ஐ பார்த்த மனைவி.. அதிர்ச்சியில் உறைய வைத்த போட்டோ..!
- ‘இந்த ஆயிலை வாங்கி தர முடியுமா?’.. பேஸ்புக்கில் வந்த பெண்ணின் ‘மெசேஜ்’.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..!
- ‘விளம்பர சந்தையில் தனி ஆதிக்கம்'... ‘கூகுள் நிறுவனம் மீது அமெரிக்க மாகாணங்கள் வழக்கு’...!!!
- திருமணமான பெண்கள்தான் ‘குறி’.. சிக்கிய இளைஞர்.. வெளியான ‘திடுக்கிடும்’ தகவல்..!
- 'இனிமேல் இந்த மாடல் போன்களில் எல்லாம்...' 'வாட்ஸ் அப் யூஸ் பண்ண முடியாது...' - கடும் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்...!