"பாலைவனம் நடுவுல விமானமா?.. இது எப்படி பாஸ் இங்க?".. 20 வருஷம் கழிச்சும் நீடிக்கும் மர்மம்?!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அவ்வப்போது இணையத்தில் நாம் நேரத்தை உலவிடும் போது நம்மை சுற்றி நடைபெறும் ஏராளமான விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ள முடியும்.

Advertising
>
Advertising

Also Read | மண்ணுக்குள் புதையும் இந்திய நகரம்.. பிரதமர் அலுலகத்தில் நடந்த அவசர ஆலோசனை.. திகிலூட்டும் பின்னணி..!

இதில், நிறைய மர்மமான இடங்கள் குறித்தும் சில தகவல்கள் வைரல் ஆவதை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில், துபாய் அருகே மர்மமான முறையில் நின்றிருந்த விமானம் ஒன்று பற்றிய தகவல் தான், தற்போது பலரையும் திகைப்படைய வைத்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ரஸ் அல் கைமாவின் தெற்கே சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது உம் அல் குவைன் என்ற பகுதி. சுற்றிலும் பாலைவனமாக தென்படும் இந்த பகுதியின் நடுவே தான் விமானம் ஒன்று சுமார் 20 ஆண்டுகளாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்த விமானம் எப்படி பாலைவனத்திற்கு நடுவேயுள்ள பகுதியில் வந்து சேர்ந்தது என்பது குறித்த பல விஷயங்கள் மர்மமாகவே இருக்கிறது. ஆனால் இது குறித்து வெளியான சில தகவலின் படி, 1975 ஆம் ஆண்டு உஸ்பெகிஸ்தான் பகுதியில் இந்த விமானம் தயாரிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் ரஷ்ய ராணுவத்தில் இந்த விமானம் சேர்க்கப்பட்டதாகவும் ராணுவத்திற்கு தொடர்பான பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

1990 களின் முற்பகுதியில் இந்த விமானத்தை விற்க ரஷ்ய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்போது ரஷ்யாவை சேர்ந்த செர்காய் போட் என்பவர் இந்த விமானத்தை வாங்கியுள்ளதாக சொல்லப்படும் நிலையில், அவரது சகோதரர் விக்டர் போட் என்பவர் சிறைக் கைதியாக இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றது. ரஷ்யாவிடமிருந்து இந்த விமானத்தை விக்டர் வாங்கி இருந்த நிலையில் அவரது சகோதரர் செர்காய் போட் பெயரில் விமானத்தை வாங்கி பல கடத்தல் உள்ளிட்ட விஷயங்களிலும் அதனை பயன்படுத்தி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஐக்கிய அரபு அமீரக நாடுகளின் அவைகள் பாதுகாப்பு பிரிவிற்கு இந்த விமானம் கடத்தல் உள்ளிட்ட விஷயங்கள் ஈடுபடுவதாக தகவல் போன நிலையில், பல நாடுகளின் ராணுவமும் விக்டர் போட்டை கண்காணிக்க தொடங்கியுள்ளது.

இப்படி பல தகவல்களை பின்னணியில் கொண்டு துபாயில் நின்றிருந்த இந்த விமானம் எப்படி அங்கே வந்து சேர்ந்தது என்பது பற்றியும் யார் இதை விட்டுவிட்டு எப்படி வெளியேறி சென்றார்கள் என்பது பற்றிய விஷயங்களும் தொடர்ந்து மர்மமாகவே நீடித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. அப்படி ஒரு சூழலில் சமீபத்தில் இந்த விமானம் பிரித்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

இப்படியே பல மர்மமான பின்னணியை கொண்ட இந்த விமானம் குறித்த செய்தி தற்போது இணையத்தில் பலரையும் மிரண்டு போக வைத்துள்ளது.

Also Read | வழுக்கை தலை உடையவர்களுக்கு மாதம் 6000 ரூபாய் ஓய்வூதியம்.. முதல்வருக்கு சென்ற கோரிக்கை..!

UAE, PLANE, UAE MYSTERY PLANE, DESERT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்