'எல்லாமே அவன் தான்'...'மொத்த குடும்பத்தையே பலி வாங்கிய 'கோர விபத்து'... கொடூர சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஓமனில் நடந்த கார் விபத்தில் ஐதராபாத்தை சேர்ந்த தம்பதி உட்பட மொத்த குடும்பமும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்தவர் கவுசல்லா அஸ்மத்துல்லா கான். துபாயில் பொறியாளராக வேலை செய்து வரும் இவருக்கு ஆயிஷா என்ற மனைவியும், 3 வயதில் ஹனியா என்ற மகளும் 8 மாத ஹம்சா கான் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் நால்வரும் குடும்பத்துடன் ஓமன் சென்று கொண்டு துபாய்க்கு திரும்பி கொண்டிருந்தார்கள். அப்போது சலாலா என்ற இடத்தின் அருகே கார் வந்தபோது, எதிரே வந்த கார் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. மோதிய வேகத்தில் அஸ்மத்துல்லா சென்ற கார் கவிழ்ந்து உருண்டது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்தில் அஸ்மத்துல்லா, அவருடைய மனைவி ஆயிஷா, மகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தலையில் பலத்த காயம் அடைந்த 3 வயது ஹனியா மருத்துவமனையில் சிகிசைக்காகச் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். சாலை விபத்தில் மொத்த குடும்பமும் உயிரிழந்த சம்பவம் அங்குள்ள இந்தியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே ஐதராபாத்தில் உள்ள அஸ்மத்துல்லா'வின் இளைய சகோதரர் கூறும் போது ''அஸ்மத்துல்லா தான் எங்கள் குடும்பத்தின் ஆணி வேராக இருந்தார். அவரது குடும்பத்திற்கு இப்படி ஒரு சோகம் நடக்கும் என கனவிலும் நினைக்கவில்லை. தனது கடின உழைப்பால் முன்னேறி துபாயில் வேலைக்கு சென்றவருக்கு இப்படி ஒரு முடிவா'' என கண்ணீர் மல்க கூறினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- சுபஸ்ரீ மரணம்: ஆளும்கட்சியோ,எதிர்க்கட்சியோ யார் பேனர் வைத்தாலும் ஓராண்டு சிறை-கலெக்டர் அதிரடி!
- ‘லாரியை முந்த முயன்ற’.. ‘வேன் கவிழ்ந்து பயங்கர விபத்து’.. ‘சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழந்த பரிதாபம்’..
- ‘அசுர வேகத்தில் வந்த கார்’.. ‘நொடியில் நடந்த கோர விபத்து’.. ‘3 குழந்தைகள் உட்பட 5 பேர் உடல் கருகி பலியான பயங்கரம்’..
- ‘சொந்த வேலையாக வந்தபோது’... ‘நடுரோட்டில் திடீரென தீப்பிடித்த கார்’... ‘சென்னை அண்ணா சாலையில் பரபரப்பு’
- ‘நொடிப்பொழுதில் தடம் புரண்ட பயணிகள் ரயில்’.. ‘கோர விபத்தில் 50 பேர் பலி’.. ‘பதைபதைக்க வைக்கும் சம்பவம்’..
- 'இந்தா விழுந்துருச்சுல்ல.. 'மீண்டும் பேனர் விழுந்து படுகாயம்.. மருத்துவமனையில் சிகிச்சைபெறும் டாஸ்மாக் ஊழியர்'!
- 'துணிச்சலானவள்.. அவள் மீது தவறல்ல'.. 'எதுவும் அவள் இழப்பை ஈடு செய்யாது' .. 'ஆழ்ந்த இரங்கல்கள் சுபஸ்ரீ'!
- ‘இளைஞர் கைதுக்கு காரணமான 2 மாம்பழம்’.. விமான நிலையத்தில் நடந்த வித்தியாசமான சம்பவம்..!
- ‘அரசியல் கட்சி பேனர் சரிந்ததில்’.. ‘நிலைதடுமாறி லாரியில் சிக்கிய இளம்பெண்’.. ‘சென்னையில் நடந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம்’..