'இந்த நாட்டுக்கு போற ஐடியா இருக்கா'?... 'இந்தியா உள்பட 14 நாட்டின் விமானங்கள் வர தடை'... அதிரடி அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை அனைத்து துறைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் விமான போக்குவரத்து பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. அந்த வகையில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாகக் கடந்த ஏப்ரல் மாதம் 24-தேதியில் இருந்து இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கான விமானச் சேவையை ஐக்கிய அரபு அமீரகம் தடைசெய்திருந்தது.

கடந்த 19-ந்தேதி, ஜூன் 27-தேதியில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்பட 14 நாடுகளிலிருந்து வருபவர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதித்திருந்தது. இந்த நிலையில் தற்போது தடைவிதித்துள்ளது. இந்த நிலையில், தற்போதும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரழிவுகள் அவசரநிலை மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தியாவுடன் பாகிஸ்தான், இலங்கை, லைபீரியா, நமிபியா, சியாரா லியோன், காங்கோ, உகாண்டா ஜாம்பியா, வியட்நாம், வங்காளதேசம், நேபாளம், நைஜீரியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து விமானச் சேவைக்கும் தடையை நீட்டித்துள்ளது. ஆனால் சரக்கு விமானம், தொழில், வாடகை விமானம் ஆகியவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்