VIDEO: ‘மேடம் கொஞ்சம் நில்லுங்க’!.. ‘ரெண்டு பேரும் உங்க ஐடி கார்டை காட்டுங்க’.. போலீசாருக்கு ‘ஷாக்’ கொடுத்த 2 பெண்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா தடுப்பூசி வாங்குவதற்காக இரண்டு பெண்கள் நூதன முறையில் ஏமாற்றிய சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஒர்லாண்டோவில் கொரோனா தடுப்பு மருந்தை வாங்குவதற்காக இரண்டு வயதான பெண்கள் வந்துள்ளனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு அவர்கள் இருவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதனை அடுத்து அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தி அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டுள்ளனர்.

உடனே அவர்கள் தங்களது டிரைவிங் லைசன்ஸை காட்டியுள்ளனர். ஆனாலும் சந்தேகம் வழுத்ததால், அவர்களது சுகாதார அட்டையை போலீசார் கேட்டுள்ளனர். இரண்டிலும் வயது வித்தியாசம் இருந்துள்ளது. இதனை அடுத்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் ஒரு அதிர்ச்சி தகவலை அப்பெண்கள் கூறியுள்ளனர்.

அப்பெண்கள் இருவரும் கொரோனா தடுப்பு மருந்தை இரண்டாவது முறையாக வாங்குவதற்காக வயதான வேடமிட்டு வந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அவர்கள் இருவரையும் எச்சரித்து அனுப்பினர். மேலும் முதலில் எப்படி கொரோனா தடுப்பு மருந்து அவர்களுக்கு வழங்கப்பட்டது? என போலீசார் விசாரித்து வருகின்றனர். அமெரிக்காவில் கொரோனா முன்கள பணியாளர்களுக்கும், வயதானவர்களுக்கும் முதலில் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்