இரண்டு 'பெரிய' வண்டிகள் முழுதும் 'அழுகிய' உடல்கள்... 'ஆடிப்போய்' நிற்கும் நாடு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் கடுமையான பாதிப்பில் தவித்து வரும் நிலையில் அதிலும் குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்கா வைரசின் பிடியால் கதிகலங்கி நிற்கிறது.

அமெரிக்காவில் சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அறுபது ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. நாள் ஒன்றிற்கு சராசரியாக 1500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். அமெரிக்காவில் குறிப்பாக நியூயார்க் மற்றும் நியூஜெர்சி மாகாணங்கள் அதிகமாக பாத்திக்கப்பட்டுள்ளன. நியூயார்க் நகரில் மட்டும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 23 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நியூயார்க் நகரின் புரூக்ளின் பகுதியில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடத்தில் நான்கு ட்ரக்குகளில் பல அழுகிய உடல்கள் இருந்த தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக இந்த ட்ரக்குகள் நின்றிருந்த நிலையில் நேற்று காலை வாகனத்தில் இருந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது. அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் இரண்டு ட்ரக்குகளில் சுமார் 12 - க்கும் மேற்பட்ட உடல்கள் அழுகி இருப்பதை கண்டறிந்தனர்.

வேனில் உள்ள குளிர்சாதன பெட்டி செயலிழந்ததால் உடல்கள் அழுகை ஆரம்பித்து துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளன. மேலும், அமெரிக்காவில் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில் உடல்களை புதைக்க கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் உடல்களை குளிர்சாதன பெட்டிகளை பயன்படுத்தி காத்து வருகின்றனர்.

போலீசார் விசாரித்து உடல்களை அப்புறப்படுத்திய நிலையில் அப்பகுதி முழுவதும் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டுமென இறுதி சடங்குகளை நிர்வகிக்கும் குழு மற்றும் நியூயார்க் மாகாண சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. மேலும் அழுகிய நிலையில் கைப்பற்றப்பட்ட உடல்களை உடனடியாக அடக்கம் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்