75 வருஷதுக்கு முன்னாடி பிரிஞ்சுபோன 2 குடும்பம்.. ஒரே வீடியோவால் நடந்த அற்புதம்.. நெகிழ வச்ச பின்னணி..!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது பிரிந்துபோன இரண்டு நண்பர்களின் குடும்பங்கள் தற்போது ஒன்றிணைந்திருக்கிறது.
Also Read | எதே.. 3 மாம்பழம் 10 லட்சம் ரூபாயா..? ஏலத்துல வந்த போட்டி.. இலங்கையில் நடந்த சுவராஸ்யம்..!
பிரிவினை
1947 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை நடந்த போது எல்லை பகுதிகளில் இருந்த பலரும் வெவ்வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தார்கள். இந்த சம்பவம் பல குடும்பங்களை பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் இடம்பெயர காரணமாக அமைந்தது. அப்படி இந்திய பிரிவினையின்போது பிரிந்தவர்களுள் தயா சிங் மற்றும் குலாம் முகமதுவும் ஒருவர். சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் இருவரும் நண்பர்கள்.
இருவரும் பிரிவினைக்கு முன் குருக்ஷேத்ரா மாவட்டத்தின் பெஹோவா தொகுதியில் உள்ள போதானி எனும் கிராமத்தில் வசித்துவந்தனர். பிரிவினை சமயத்தில் இருவருமே வெவ்வேறு இடங்களுக்கு குடியேறியதால் ஒருவரை ஒருவர் காணமுடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும், இருவரும் கடிதங்கள் வாயிலாக தங்களது அன்பை பரிமாறிக்கொண்டுவந்தனர். 1978 ஆம் ஆண்டு வரை இந்த கடிதப் போக்குவரத்து தொடர்ந்திருக்கிறது. துரதிருஷ்டவசமாக ஒருவரை ஒருவர் சந்திக்காமலேயே இருவரும் மரணமடைந்தனர்.
புகைப்படம்
இவர்களது மதங்களை கடந்த நட்பு அவர்களது குடும்பத்தினர்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. முன்னதாக தயா சிங் தனது நண்பர் முகம்மதுக்கு ஒரு கடிதத்தையும் அதனுடன் தனது மகன் அவதார் சிங்கின் புகைப்படத்தையும் அனுப்பியிருந்திருக்கிறார். பாகிஸ்தானில் முகமதுவின் குடும்பத்தினரோடு அவதார் சிங் இருக்கும் புகைப்படம் அது. இந்நிலையில், முகமதுவின் பேரன் அடீல் தாஹிர் அந்த புகைப்படத்தை நசீர் என்பவரின் உதவியோடு பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அடுத்தநாளே அவதார் சிங்கின் குடும்பத்தினர் அந்த பதிவை கண்டிருக்கின்றனர். இதன்மூலம் இரு குடும்பத்தினருக்கும் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து பேசிய அவதார் சிங்,"75 ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நசீர் தில்லானுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். எதிர்காலத்தில் நரோவால் (பாகிஸ்தான்) குருத்வாரா கர்தார்பூர் சாஹிப்பில் ஒன்றுசேர திட்டமிட்டுள்ளோம். எங்கள் குடும்பங்கள் ஒருவரையொருவர் தெரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டன" என மகிழ்ச்சியோடு தெரிவித்திருக்கிறார்.
பிரிட்டிஷ் ராணுவத்தில் பணிபுரிந்த தயா 25 ஆண்டுகளுக்கு முன்னர் மரணமடைந்திருக்கிறார். பாகிஸ்தானில் பழ வியாபாரம் செய்துவந்த முகமதுவும் வயது மூப்பின் காரணமாக மரணம் அடைந்த நிலையில், இரு குடும்பத்தினரும் விரைவில் ஒருவரை ஒருவர் சந்திக்க இருக்கின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "கிச்சன் ஒரு நாட்டுல.. டைனிங் டேபிள் ஒரு நாட்டுல".. வீட்டுக்குள் போடப்பட்ட எல்லைக்கோடு.. இப்படியும் ஒரு இடமா..?
- கண்ணை மறைத்த காதல்.. இந்திய எல்லையில் சிக்கிய பாக். இளம்பெண்.. வாக்குமூலத்தை கேட்டு அதிர்ந்துபோன அதிகாரிகள்..!
- ICU வில் உரிமையாளர்.. 40 நாள் ஹாஸ்பிடல் வாசல்லயே நின்ன பாசக்கார நாய்க்குட்டி.. கடைசியா வெளில வந்தப்போ.. நெகிழ வைக்கும் வீடியோ..!
- என் தம்பிய பாத்து 74 வருஷம் ஆச்சு.. கட்டித் தழுவிய சகோதரர்கள்.. கண் கலங்க வைத்த வீடியோ!!
- இந்தியா-பாகிஸ்தான் 'எல்லையில்' பிறந்த குழந்தைக்கு வைக்கப்பட்ட பெயர்...! 'இத' விட பொருத்தமான பெயர் 'உலகத்துல' எங்க தேடினாலும் கிடைக்காது...!
- ‘உயிரோட இருக்குறது குடும்பத்துக்கே தெரியாது’.. 45 வருச வைராக்கியம்.. வேலைக்காக ‘வெளிநாடு’ போனவருக்கு நேர்ந்த சோகம்..!
- 'அந்த உப்பு நீர் ஏரி தான் நம்ம டார்கெட்!'.. படைகளை திரும்ப பெறுவது போல் நாடகமாடி... சீனாவின் 'மாஸ்டர் ப்ளான்' அம்பலம்!.. கொந்தளித்த இந்திய ராணுவம்!.. எல்லையில் உச்சகட்ட பரபரப்பு!
- இந்தியா-சீனா எல்லையில் மீண்டும் மோதல்... என்ன தான் நடக்குது?.. எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் 'இது' தான்!.. சீனா அடித்த பல்டி!
- 'எல்லையில்' அதிகரிக்கும் 'பதற்றம்...' 'சீனாவுடன்' மற்றொரு 'மோதலுக்கு வாய்ப்பு?' 'எச்சரிக்கும் ராணுவ அதிகாரி...'
- 'எதைப்பற்றியும் கவலையில்லை...' "நீ ரோட்ட போடு மாப்ள..." "இனி வர்ரத பார்துக்கலாம்..." 'உள்கட்டமைப்புகளை' மேம்படுத்தும் 'பணியில்...' '10 ஆயிரம் வீரர்கள்...'