சுமார் 300 வருஷத்துக்கு முன்னாடியே கடலில் மூழ்கிய அரசரின் கப்பல்.. உள்ள இருந்த பொக்கிஷத்தை கண்டுபிடிச்சும் வெளில சொல்ல முடியாம தவிக்கும் சகோதரர்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கிட்டத்தட்ட 300 வருடங்களுக்கு முன்னர் கடலில் மூழ்கிப்போன இங்கிலாந்து அரசருக்கு சொந்தமான கப்பலில் இருந்து பொக்கிஷங்களை கண்டுபிடித்தும் அதைப்பற்றிய விபரங்களை வெளிவிட முடியாமல் தவித்து வருகிறார்கள் சகோதரர்கள் இருவர்.

Advertising
>
Advertising

உலகம் முழுவதும் பழங்காலத்தில் இருந்தே, கப்பல் போக்குவரத்து சிறப்பாக இருந்திருக்கிறது. வாணிபம் செய்ய, பிற நாடுகளுக்கிடையே போர் தொடுக்கவும் அன்றைய அரசர்கள் தீராத வேட்கை கொண்டிருந்தனர். அந்த வகையில் பெருங்கடல்களில் கப்பல்களின் எண்ணிக்கை அதிகமானது. இதனிடையே அவ்வப்போது ஏற்படும் நாடுகளுக்கு இடையேயான போர்கள், கடற் கொள்ளையர்கள் தாக்குதல் என பல்வேறு காரணங்களினால் கணிசமான கப்பல்கள் கடலில் மூழ்கிப்போகின. தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களுடன் கடலில் மூழ்கிப்போன கப்பல்களில் இருந்து அவற்றை மீட்க, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் போட்டிபோட்டு வருகின்றன.

இந்நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த மூழ்கிப்போன கப்பல் ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள் சகோதர்கள் இருவர். இருப்பினும் அவை குறித்த ரகசியங்களை வெளியே சொல்ல முடியாமல் 15 வருடங்களாக தவித்துவருகின்றனர்.

அரசரின் கப்பல்

இங்கிலாந்தின் அரசராக இரண்டாம் ஜேம்ஸ், பொறுப்பேற்க இருந்த நேரம். 1650 களில் கட்டப்பட்ட HMS Gloucester என்னும் கப்பல் அரசருக்கு சொந்தமானதாகும். 1682 ஆம் ஆண்டு எடின்பர்க் நகரத்திற்கான தனது பயணயத்தை துவங்கியது இந்த கப்பல். 50 துப்பாக்கி படையை கொண்டிருந்த இந்த பிரம்மாண்ட கப்பல் ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து உடனான போரில் பெரும்பங்கு வகித்தது. பல வெற்றிகளை கண்டிருந்த இக்கப்பல், மணல்மேட்டில் மோதி, மூழ்கத் துவங்கியது. இந்த சோக சம்பவத்தில் 130-250 வரை இறந்திருக்கலாம் என நிபுணர்கள் கணித்திருக்கின்றனர்.  

தேடல்

கப்பல் மூழ்கி பல வருடங்கள் ஆன பிறகு இங்கிலாந்தை சேர்ந்த லிங்கன் மற்றும் ஜூலியன் பார்வெல் என்னும் சகோதர்கள் அதை தேடத்துவங்கினர். ஸ்கூபா டைவிங்கில் நிபுணர்களான இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த கப்பலை கண்டுபிடித்துவிட்டனர். அதிலிருந்த கலைப்பொருட்களை கைப்பற்றிய இருவரும், அதனைப்பற்றி வெளியே சொல்ல முடியாத நிலையில் இருக்கின்றனர். கப்பலின் முக்கியத்துவம் காரணமாக அதைப்பற்றி வெளியே சொல்லமுடியாமல் இருப்பதாக கூறுகிறார்கள் இருவரும்.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக அந்த கலை பொருட்களை இருவரும் பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நார்விச் கேஸ்டில் அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடம் நடத்தும் கண்காட்சியில் இந்த பொருட்களை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க இருக்கிறார்கள் இருவரும்.

சுமார் 300 வருடங்களுக்கு முன்னர், கடலில் மூழ்கிப்போன கப்பலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட கலை பொருட்கள் குறித்து தெரிந்துகொள்ள உலகமே ஆர்வத்துடன் காத்திருக்கிறது.

ENGLAND, SHIP, DISCOVERY, இங்கிலாந்து, கப்பல், பொக்கிஷம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்