"ஆத்தி... சைலண்டா எவ்ளோ வேல பாத்திருக்காங்க!".. அதிர்ந்து போன ட்விட்டர்!.. 1 லட்சத்து 70 ஆயிரம் கணக்குகள் நீக்கம்!.. என்ன சொல்லப்போகிறது சீனா?
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவுக்கு ஆதரவாக கருத்துக்களை பரப்பும் வகையில் இயங்கி வந்த 1 லட்சத்து 70 ஆயிரம் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது.
சீனாவில் சமூக வலைதளமான ட்விட்டர் அதிகாரப்பூர்வமாக தடை செய்யப்பட்டிருந்தாலும், வி.பி.என். மூலம் பலரும் ட்விட்டரை பயன்படுத்தி வருகின்றனர். சீன ஆதரவு பிரசாரத்தின் நோக்கமானது, வெளிநாடுகளில் உள்ள சீனாவை சேர்ந்தவர்களின் திறனை பயன்படுத்தி கட்சியின் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான முயற்சி என ட்விட்டருடன் இணைந்து பணியாற்றிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
முக்கியமாக இந்த கணக்குகள் அனைத்தும் சீன மொழிகளில் மட்டும் ட்வீட் செய்வதாகவும் ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளது. சி.என்.என். தகவலின்படி, ட்விட்டர் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றிய நிபுணர்கள் கூறுகையில், சீன ஆதரவு கணக்குகள், ஹாங்காங் போராட்டம், கொரோனா தொற்று மற்றும் மற்றவை குறித்து போலியான செய்திகளை பரப்பி வந்துள்ளனர்.
ஸ்டான்போர்டு இணைய ஆய்வகத்தின் ஆராய்ச்சி மேலாளர் ரெனீ டிரெஸ்டா கூறுகையில், "இந்த கணக்குகள் பல ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்டன. மேலும், கொரோனா தொற்று பற்றி பதிவுகளை இடுவதில் ஈடுபட்டுள்ளன. கொரோனா தொற்றை ஒழிக்க சீனா பாடுபடுவதாக பாராட்டு தெரிவித்தும், ஹாங்காங் போராட்டக்காரர்கள் மற்றும் அமெரிக்காவை விரோதிகளாக சித்தரித்தும் ட்வீட்களை பதிவு செய்துள்ளன" என்றார்.
ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக புவிசார் அரசியல் குறித்து பரப்புவது, தனது இயங்குதள கொள்கைக்கு எதிராக உள்ளது. சீனாவிற்கு சாதகமான செய்திகளை உருவாக்குவதில் 23,750 கணக்குகள் முக்கிய நெட்வோர்க் உடன் இணைந்து மிகவும் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்ததையும், அவற்றை ரீ-ட்வீட் செய்து பரப்புவதற்கு பயன்படுத்தப்பட்ட 1 லட்சத்து 50 ஆயிரம் கணக்குகளை அடையாளம் கண்டோம். இந்த 23,750 கணக்குகள், சுமார் 3 லட்சத்து 48 ஆயிரத்து 608 முறை ட்வீட் செய்துள்ளதாக ஸ்டான்போர்டு இணைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் ரஷ்ய அரசுக்கு ஆதரவான 1,000 ட்விட்டர் கணக்குகளையும், துருக்கி அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த 7,340 கணக்குகளையும் ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஹாங்காங்கில் அரசியல் முரண்பாட்டை விதைக்க முயற்சித்த, சீனாவில் செயல்பாட்டில் இருந்த சுமார் 1,000 ட்விட்டர் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மதுரையில் திடீரென வேகமெடுக்கும் கொரோனா!.. நெல்லை, தூத்துக்குடியிலும் தலைதூக்குகிறது!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 1,342 பேர் கொரோனாவை வென்றுள்ளனர்!.. முழு விவரம் உள்ளே
- 'அமெரிக்காவில் கலக்கிய இந்திய டாக்டர்...' 'கொரோனா வந்து 2 நுரையீரல்களும் அஃபெக்ட் ஆயிருக்கு...' வெற்றிகரமாக இந்த ட்ரீட்மென்ட் மூலமா தான் காப்பாத்திருக்கார்...!
- "மிரட்டுனா பணியுற ஆளு நாங்க இல்ல..." '18 லட்சம் கோடி' வர்த்தகம் போனாலும் 'பரவால்ல...' சீனாவுக்கு 'கெத்து' காட்டிய 'நாடு...'
- 'உலகம்' முழுவதும் 'ஆண்கள்' தான் 'அதிகம்...' 'இந்தியாவில்' மட்டும் 'பெண்கள்தான்' அதிகமாம்... 'ஏன் அப்படி?...'
- ஒட்டுமொத்த இந்தியாவிலும்... 'இந்த' 69 மாவட்டங்களில் தான்... கொரோனா 'இறப்பு' விகிதம் அதிகமாம்!
- 'யாரு கண்ணு பட்டுச்சோ தெரியலியே'... 'இறங்கிய வேகத்தில் எகிறிய கொரோனா '.... 'என்ன செய்ய போறோம்'... அச்சத்தில் மக்கள்!
- இந்த மிரட்டலுக்கு நாங்க பயப்பட மாட்டோம்...' நாம இப்படி அனுபவிக்குறதுக்கு காரணமே...' 'சீனாவோட அலட்சியம் தான்...' டிராகனுடன் மோதும் கங்காரு...!
- 15 'மூலிகைகள்' கொண்டு தயாரிக்கிறோம்... நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 'இனிப்பு'கள் அறிமுகம்... விலை எவ்ளோ தெரியுமா?
- ‘2 ரூபாய்க்கு கொரோனா மருந்து’.. ‘தமிழக’ மருத்துவரின் கண்டுபிடிப்பை பரிசீலிக்க.. சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு..!