'இந்தாங்க.. இவரத்தானே கேட்டீங்க'.. 'இவ்ளோ FAST-ஆ? ரொம்ப நன்றி ட்விட்டர்'.. உருகிய பெண்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தன்னுடைய 5வது வயதில் தனக்கு பைக் ஒன்றை பரிசாக அளித்த ஒருவரை 24 வருடங்களுக்குப் பின்னர் தேடிக் கண்டுபிடித்து தந்தமைக்காக இளம் பெண் ஒருவருக்கு ட்விட்டருக்கு நன்றிகளை தெரிவித்து மகிழ்ந்திருக்கிறார்.

லண்டனில் வசித்து வரும் மேவன் பாபங்கர் என்கிற 29 வயதான பெண், தனது 5வது வயதில், வளைகுடா போரின் தொடக்கத்தில், ஈரானில் இருந்து குடும்பத்துடன் வெளியேறி நெதர்லாந்து அகதிகள் முகாமுக்கு சென்று தஞ்சம் அடைந்தார்.

அப்போது மேவனுக்கு அங்கிருந்த பெரியவர் ஒருவர் சிறிய பைக் ஒன்றை பரிசாக அளித்தார். ஆனால் அதற்குள் காலமுள் வேகமாக சுழன்றதில் அந்த பெரியவரை மேவன் மிஸ் செய்துள்ளார். திரும்பவும் அவரின் புகைப்படத்துடன் சில விபரங்களைக் குறிப்பிட்டு ட்விட்டரில் அவரை கண்டுபிடித்து தந்துவுமாறு பதிவிட்டிருந்தார்.

உடனே அவரைக் கண்டுபிடித்துத் தந்திருக்கிறார்கள் ட்விட்டர்வாசிகள். அவர் பெயர் எக்பர்ட், அவருக்கு அழகான குடும்பம் இருப்பதாகவும், தான் ஒரு வலிமைமிக்க பெண்ணாக வளர்ந்துள்ளதில் எக்பர்ட்டுக்கு மகிழ்ச்சி என்றும் மேவன் பதிவிட்டுள்ளதோடு, இத்தனை விரைவாக ஒருவரைக் கண்டுபிடித்து தந்ததற்கு ட்விட்டருக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

TWITTER, HEARTMELTING, VIRAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்