“இந்த லிஸ்ட்டை சொல்ற வரை Twitter-ஐ வாங்க மாட்டேன்”.. திடீர் ட்விஸ்ட் வச்ச எலான் மஸ்க்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

போலி டுவிட்டர் கணக்குகள் குறித்த விவரங்கள் கிடைக்காத வரை அந்த நிறுவனத்தை வாங்க மாட்டேன் எலான் மஸ்க் டுவீட் செய்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | லட்டு மாதிரி கெடச்ச சான்ஸ்.. இப்படி மிஸ் பண்ணிட்டாரே.. கிரேட் எஸ்கேப் ஆன தவான்..!

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்தார். இந்த நிலையில் திடீரென டுவிட்டர் தளத்தில் இருக்கும் போலி கணக்குகளின் எண்ணிக்கை குறித்து தெளிவு கிடைக்காத வரை, அந்த நிறுவனத்தை வாங்கும் திட்டத்தை முன் நகர்த்தப் போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து டுவீட் செய்த எலான் மஸ்க், ‘டுவிட்டர் நிறுவனம் கூறுவதை விட 4 மடங்கு அதிகமாக சுமார் 20 சதவிகிதம் வரை போலி கணக்குகள் இயங்கி வருகின்றன. அது இன்னும் கூடுதலாக கூட இருக்கலாம். டுவிட்டர் நிறுவனம் இதுவரை அமெரிக்க அரசின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தில் மேற்கொண்ட கணக்குகளின் அடிப்படையில் எனது ஆஃபர் முன்வைக்கப்பட்டது.
நேற்று, டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொதுவெளியில் டுவிட்டரில் உள்ள போலி கணக்குகளின் எண்ணிக்கை 5 சதவிகிதத்திற்குக் கீழ் இருப்பதை நிரூபிக்க மறுத்துவிட்டார். அவர் அதை நிரூபிக்காத வரையில் இந்த ஒப்பந்தம் முன் நகராது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பராக் அகர்வால் டுவிட்டர் தளம் எவ்வாறு செயற்கை கணக்குகளையும், போலி கணக்குகளையும் எதிர்கொண்டு வருகிறது என்பது குறித்த தகவல்களை பகிர்ந்திருந்தார். இதை கிண்டல் செய்த எலான் மஸ்க், ‘தாங்கள் செலவு செய்யும் பணத்தில் தங்களுக்கு என்ன கிடைக்கிறது என்பதை விளம்பரதாரர்கள் எவ்வாறு தெரிந்து கொள்கிறார்கள்? டுவிட்டர் தளத்தின் பொருளாதார நலனுக்கு இது அடிப்படை’ எனப் பதிவிட்டிருந்தார்.

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

 

TWITTER, ELON MUSK, TWITTER CEO, எலான் மஸ்க், டுவிட்டர் கணக்குகள், பராக் அகர்வால்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்