காபி ஆர்டர் எடுக்கும் ட்விட்டர் சிஇஓ.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.. பின்னணி என்ன??

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ ஆன பராக் அகர்வால், காஃபி ஷாப் ஊழியர் போல ஆர்டர் எடுக்கும் வகையிலான புகைப்படங்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | "பேரக் குழந்தை பாத்த வயசுல.." பெண் போட்ட பிளான்.. வேற லெவல் வேஷம் போட்டு பயங்கரமாக பாத்த மோசடி வேலை..

கடந்த ஒரு மாதத்திற்கு முன், உலகின் நம்பர் ஒன் தொழிலதிபரான எலான் மஸ்க், ட்விட்டரை வாங்குவதாக சில தகவல்கள் வெளியாகி, இணையத்தில் பரபரப்பு உண்டு பண்ணி இருந்தது.

அதே போல, ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கினால், ட்விட்டர் சிஇஓ ஆன பராக் அகர்வால் பதவியும் பறிக்கப்படுமா என்பது போன்ற கருத்துக்களை நெட்டிசன்கள் குறிப்பிட்டு வந்தனர்.

காபி பரிமாறும் பராக் அகர்வால்

அந்த சமயத்தில் பராக் அகர்வால் பெயர் அதிகம் இணையத்தில் அடிபட்டு வந்து நிலையில், தற்போது மீண்டும் காபி ஷாப் ஊழியராக மாறி, அவர் ஆர்டர் எடுக்கும் புகைப்படம் ஒன்றும் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் முதல் ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ-வாக பராக் அகர்வால் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக ட்விட்டர் நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு பிரிவில் பராக் பணியாற்றி வந்த போது, ட்விட்டரை மேம்படுத்தியதில் மிக முக்கிய பங்கு அவருக்கு உண்டு.

இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் வர்த்தகம், மேம்பாட்டு பணிகள் குறித்தும் டெக் மற்றும் சமூக வலைத்தள வல்லுனர்கள் சந்திக்கும் விதமாக பராக் அகர்வால், கடந்த ஒரு வாரமாக பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் உள்ள ட்விட்டர் நிறுவனத்திற்கு சென்று சந்திப்பு நடத்தி இருந்தார். இதில், பல பொதுக் கூட்டங்களும் நடைபெற்றதாக தகவல் தெரிவிக்கின்றது.

வைரலாகும் புகைப்படங்கள்

அப்போது, லண்டன் ட்விட்டர் நிறுவனத்தில் வைத்து தான், அங்குள்ள ஊழியர்களுக்கு காபி ஆர்டர் எடுத்து, அவர்களுக்கு பரிமாறவும் செய்துள்ளார் பராக் அகர்வால். அது மட்டுமில்லாமல், அவருடன் ட்விட்டர் நிறுவனத்தின் CFO ஆன நெட் சேகலும், அங்கிருந்த ஊழியர்களுக்கு பிஸ்கட்களை பரிமாறவும் செய்தார்.

அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் பணிபுரியும் ஊழியர்கள், இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பான பதிவை பார்க்கும் பராக்கும், தனது ஊழியர்களின் பதிவுகளை ட்விட்டரில் ரீ ட்வீட் செய்து கருத்து தெரிவித்து வருகிறார்.

Also Read | பெட்ரோல் பங்க் வந்த Dining Table.. வியந்து பார்த்த நெட்டிசன்கள்.. அதுக்கு ஆனந்த் மஹிந்திரா போட்ட கேப்ஷன் தான் 'அல்டிமேட்'..

TWITTER CEO, PARAG AGRAWAL, TWITTER CEO PARAG AGARWAL, PARAAG AGARWAL SERVES COFFEE TO STAFF

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்