உக்ரைன் மீது தொடர் போரிட்ட ரஷ்ய படைகள்.. வீடியோக்களை பகிர்ந்த மக்கள்.. ட்விட்டர் தந்த அதிரடி விளக்கம்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ரஷ்ய படைகள் தொடர்பான காட்சிகளைப் பகிர்ந்த பலரது ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertising
>
Advertising

நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய ஐரோப்பிய அமைப்புகளை நோக்கிய உக்ரைனின் நகர்வை ரஷ்யா நீண்ட காலமாக எதிர்த்து வருகிறது. ரஷ்யாவுடன் கலாச்சாரம் மற்றும் மொழி ரீதியாக தொடர்புகொண்டுள்ள உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணக்கம் காட்டுவதை அதிபர் விளாடிமிர் புதின் விரும்பவில்லை. 2014ம் ஆண்டு முதலே இருந்து வரும் இந்த பிரச்சனை கடந்த சில மாதங்களாக உச்சத்தை எட்டியது. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 2-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

கண்ணீர் விட்டு கதறும் மக்கள்

உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியா தொடுத்துள்ள போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்தார். உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ்'-ல் உள்ள ஒடேசா துறைமுகத்தில் ரஷ்ய படைகள் சக்தி வாய்ந்த ஏவுகணை தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை உருவாக்கியது. மேலும் டோனக்ஸ், கார்கிவ், மைக்கோல், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷ்யா தாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. உக்ரைன் நகரம் குண்டு வீச்சுக்கு ஆளாவது, கட்டிடங்கள் பற்றி எரிவது, மக்கள் ரயில், விமான நிலையங்களில் தப்பிக்க வழியின்றி காத்திருப்பது போன்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி மனதை உலுக்கி வருகின்றன.

ட்விட்டர் கணக்குகள் முடக்கம்

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, முதல்நாள் போரில் 137 உக்ரேனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், ரஷ்யாவுக்கு எதிரான போரில் தனித்துவிடப்பட்டிருப்பதாகவும் உருக்கமாக கூறியுள்ளார். இந்நிலையில் உக்ரைன் மீது போர் தொடுத்திருப்பதை கண்டித்து ரஷ்ய மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள், போருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். போர் வேண்டாம் 'No to war' என்ற முழக்கத்துடன் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இந்நிலையில் ரஷ்யாவின் போர் தாக்குதல்கள் சம்பந்தமான வீடியோக்களை பதிவிட்ட பலரது ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ட்விட்டர் நிர்வாகம் விளக்கம்

ரஷ்ய ராணுவ படை மற்றும் கவச வாகனங்கள் உக்ரைன் எல்லைக்குள் நுழைவது, ரஷ்ய ஹெலிகாப்டர்கள் அல்லது டேங்க் வாகனங்களின் படையெடுப்பு காட்சிகளை கிழக்கு டான்பாஸ் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில் உள்ள ட்விட்டர் யூஸர்கள் பதிவிட்டதாக தெரிகிறது. இந்த வீடியோக்களை ரீ-ட்வீட் செய்த பலரது கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் 12 மணி நேரத்திற்கு முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது எதிர்பாராதவிதமாக நடந்த தவறு என ட்விட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

ட்விட்டர் செய்தித் தொடர்பாளர் இன்சைடர் கூறுகையில், "ட்விட்டர் கொள்கைகளை மீறும் விதமாக பரப்பப்படும் வதந்திகள், கட்டுக்கதைகளை முன்கூட்டியே கண்காணித்து கட்டுப்படுத்தி வருகிறோம். இந்த நிகழ்வின் போது தவறுதலாக பல கணக்குகள் முடக்கப்பட்டுவிட்டன" என்று தெரிவித்தார்.

UKRAINE, RUSSIA, VILADMIR PUTIN, VOLODYMYR ZELENSKYY, WAR, TWITTER VIDEO, NO WAR, RUSSIA PEOPLE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்