'ஜார்ஜ் பிளாய்ட்' கொலை வழக்கில் 'திருப்பம்...' 'படுகொலைக்கு' பிந்தைய சோதனையில் 'கொரோனா உறுதி...' 'டாக்டர்கள்' தந்த 'அதிர்ச்சி ரிப்போர்ட்...'
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் கொலையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய 4 போலீஸ் அதிகாரிகள் மீதும் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் போராட்டங்கள் முடிவுக்கு வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமெரிக்காவில் மின்னிபொலிஸ் நகரில் 46 வயதுடைய ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பு இனத்தவர், கடந்த 25-ந் தேதி போலீசாரால் கொலை செய்யப்பட்டார். இது கருப்பின மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படுகொலை காட்சிகள் அடங்கிய வீடியோ அங்கு வைரலாகி அதிர வைத்தது.
இந்த கொலையில் நேரடி தொடர்புடைய போலீஸ் அதிகாரி மீது மட்டும் கொலை வழக்கு முதலில் பதிவானது. ஆனால் தொடர்புடைய 4 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து நீதி வழங்க வேண்டும் என் கருப்பு இன மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பலியான ஜார்ஜ்பிளாயிட்டின் மனைவியும் மீடியா முன் தோன்றி இதனை வலியுறுத்தினார்.
இந்த நிலையில் ஜார்ஜ் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜார்ஜ் பிளாய்ட் படுகொலையில் தொடர்புடைய 4 போலீஸ் அதிகாரிகள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மின்னிசோட்டா மாகாண அட்டார்னி ஜெனரல் அறிவித்துள்ளார்.
பணிநீக்கம் செய்யப்பட்ட எஞ்சிய 3 போலீஸ் அதிகாரிகளான தாமஸ்லேன், அலெக்சாண்டர் குயெங், டூ தாவோ ஆகியோர் மீது கொலைக்கு உடந்தையாக இருந்ததாக தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் 2-ம் நிலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 3-ம் நிலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்க முடியும்.
இந்த திருப்பத்தை ஜார்ஜ் பிளாய்டு குடும்ப வக்கீல் பெஞ்சமின் கிரும்ப் வரவேற்றுள்ளார். இதனால் நாடு முழுவதும் நடந்து வருகிற கருப்பு இன மக்களின் போராட்டங்கள் முடிவுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையே ஜார்ஜ் பிளாய்ட் படுகொலைக்கு பின்னர் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கை நேற்று வெளியானது.
இதையொட்டி தலைமை மருத்துவ பரிசோதனையாளர் டாக்டர் ஆண்ட்ரூ பேக்கர் கூறுகையில், “ஜார்ஜ் பிளாய்டுக்கு மரணத்துக்கு பிந்தைய நிலையில் பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்து. அதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என குறிப்பிட்டார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அமெரிக்காவில் ஐஃபோன் கடைகள் சூறை...' "நீங்களே திருப்பி குடுத்திருங்க..." "இல்லன்னா?..." 'திருடர்களுக்கு' ஆப்பிள் நிர்வாகம் 'எச்சரிக்கை...'
- இப்படியே குத்தம் சொல்லிட்டு இருங்க... கடைசில உங்களுக்கு தான் 'ஆப்பு'...
- 'முதல்வர்' காப்பீட்டு திட்டத்தின் கீழ்... தனியார் மருத்துவமனைகளில் 'கட்டணமின்றி'... கொரோனா சிகிச்சை பெறலாம்!
- இனிமே 'வீட்டுல' தனிமைப்படுத்த மாட்டோம்... கண்டிப்பா 'இங்க' தான் போகணும்: சென்னை மாநகராட்சி ஆணையர்
- 'இறப்பதற்கு' முன் அவருக்கு... பிரேத 'பரிசோதனை' அறிக்கையில்... வெளியான 'புதிய' தகவல்!
- 10-ம் வகுப்பு தேர்வுக்காக... 'சென்னை'யில் இருந்து 'கொடைக்கானல்' சென்ற மாணவிக்கு... 'காத்திருந்த' அதிர்ச்சி!
- "மேல டச் பண்ண கூடாது ஓகே!".. 'தனிமனித' இடைவெளியுடன் பயணிக்கும் 'குரங்கு!'.. வைரல் வீடியோ!
- "மறுபடியும் மொதல்ல இருந்தா?".. 'யூ-டர்ன் அடித்த உலக சுகாதார மையம்'.. அதிரடி அறிவிப்பு!
- 'எல்லாரும் மன்னிச்சிடுங்க'... 'ஜூம் வீடியோ காலில் மீட்டிங்'... 'கேமரா ஆன் ஆனது தெரியாமல் நடந்த பகீர் சம்பவம்'!
- 'கொரோனா' வைரஸை கட்டுப்படுத்த 'புதிய மாத்திரை...!' 'வென்டிலேட்டர்களுக்கு குட்பை சொல்லுமா?...' 'இங்கிலாந்து' மருத்துவர்களின் 'புதிய நம்பிக்கை...'