'37,000 கி.மீ. பயணித்து... 20 ஆண்டுகளுக்கு பின் இருப்பிடத்தைக் கண்டறிந்த ஆமை!'... மறுவாழ்வு பெற்று... விடாமுயற்சியுடன் 'வெற்றிக் கனி'யைப் பறித்த... திகைப்பூட்டும் 'உண்மை' சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடல் ஆமை ஒன்று 37,000 கிலோ மீட்டர் தூரம் கடலில் பயணம் செய்து 20 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தைக் கண்டுபிடித்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மீன் பிடிக்கும் படகில் இருந்தவர்கள் முதுகு ஓடு உடைந்த ஆமை ஒன்றை கடலில் இருந்து மீட்டுள்ளனர். அதன் பின், தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் மாகாணத்தில் உள்ள கடல் உயிரினங்களை பரமாரிக்கும் பண்ணைக்கு அந்த ஆமையை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். யாஷி என்று அழைக்கப்படும் அந்த ஆமைக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, முழுமையாக குணமடைந்த பின்பு, அதை கடலில் நீந்துவதற்கு பழக்கப்படுத்தியுள்ளனர். ஆரம்பத்தில் நீந்துவதற்கு சிரமப்பட்ட ஆமை, ஆண்டுகள் செல்ல செல்ல நன்கு நீந்துவதற்கு ஆரம்பித்துள்ளது.

யாஷி முழுமையாக குணமடைந்துவிட்ட பின், அதனை நிரந்தரமாக கடலில் விடுவதற்கு பண்ணை கண்காணிப்பாளர்கள் முடிவு செய்தனர். மேலும், யாஷியை தொடர்ந்து கண்காணிக்கவும் முடிவு செய்து அதனுடைய உடலில் ஜி.பி.எஸ் கருவியையும் பொருத்தினர். அதுமட்டுமின்றி, ஆமைக்குத் தேவையான அனைத்து மருத்துவ சோதனைகளையும் செய்து, கடலுக்குள் விட்டனர்.

இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன் கடலில் விடப்பட்ட யாஷி, அதனுடைய இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் பயணத்தை தொடங்கியது. தொடர்ந்து 2 ஆண்டுகள் பயணம் செய்த ஆமை 37,000 கிலோ மீட்டர்கள் கடந்து இறுதியாக ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு கடற்கரையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தான் முட்டையிட்ட இடத்தை கண்டுபிடித்தது. 20 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை ஆமை தேடி கண்டுபிடித்திருப்பது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக யாஷி பயணம் செய்த அனைத்து வழித்தடங்களும் ஆராய்ச்சியாளர்களால் கண்காணிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

OCEANLIFE, TURTLE, AUSTRALIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்