யாருக்காவது சுவாச பிரச்சனை இருந்தா வெளிய வராதீங்க...! 'ஒரு நகரமே மஞ்சள் நிறமா மாறி போச்சு...' என்ன காரணம்...? - அச்சத்தில் சீன மக்கள்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவில் உருவாகிய புழுதி புயலால் மஞ்சளாக மாறிய சீன தெருவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

எப்போதும் சீனாவில் வசந்த காலத்தில் புழுதிப்புயல் தாக்குவது வழக்கமானது தான். தற்போது  சீனாவின் தலைநகர் பெய்ஜிங் நாட்டின் வடக்குப்பகுதி கடுமையான புழுதிப்புயல் ஒன்று தாக்கியுள்ளது. இந்த புயலானது சீனாவின் மேற்குப் பகுதியிலிருக்கும் பாலைவனத்திலிருந்து, கிழக்குத் திசை நோக்கி மணல் பறக்கும் தன்மையுடையது என கூறியுள்ளனர்.

மேலும் சீனாவில் கடந்த 10 ஆண்டுகளில் தாக்கிய புழுதிப்புயயை விட இந்த புயல் மிக மோசமானதாக அமைந்துள்ளது. இதன்காரணமாக, சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலும், சீனாவின் வடக்குப் பகுதிகளிலும் காற்று மாசு ஏற்பட்டு, அப்பகுதிகள் முழுவதும் மஞ்சளாய் மாறியுள்ளன.

இந்த புழுதி புயலால் சீனாவின் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல் அம்மாகாண அரசு மூச்சு சம்மந்தமான வியாதிகள் உள்ளவர்கள், வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்தான சீனத்தெருவின் மஞ்சள் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்