மக்கள் வறுமையில் இருக்காங்க.. இப்போ நாய்க்கு ‘தங்கச் சிலை’ தேவை தானா?.. சர்ச்சையில் சிக்கிய அதிபர்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நாட்டு மக்கள் வறுமையில் இருக்கும்போது துருக்மெனிஸ்தான் அதிபர் தனது செல்ல நாய்க்கு 19 அடி தங்க சிலையை திறந்துவைத்து சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

துருக்மெனிஸ்தான் அதிபர் குர்பங்குலி, தனது நாய்க்கு மிகப்பெரிய தங்க சிலையை  திறந்து வைத்துள்ளார். 19 அடி உயரம் கொண்ட இந்த நாய், அலாபை எனும் இனத்தை சேர்ந்தது. துருக்மெனிஸ்தான் அதிபருக்கு இது மிகவும் விருப்பமான நாய் இனம் எனக் கூறப்படுகிறது. இந்த நாய் துருக்மெனிஸ்தான் நாட்டின் பாரம்பரிய சின்னமாக இருக்கிறது. அந்நாட்டின் அதிபரால் அந்நாய் இனம் கொண்டாடப்படுவது இது முதல்முறையல்ல. கடந்த ஆண்டு அந்த நாய் இனத்திற்காக ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

துருக்மெனிஸ்தான் அரசு ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் இந்த சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. தங்க நாயின் சிலையைச் சுற்றி மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த தங்க நாயின் சிலையை வடிவமைக்க ஆன செலவு குறித்து இதுவரை தெளிவான தகவல் வெளியாகவில்லை. அந்நாட்டின் அரசு ஊடகம், இந்த நாய் சிலை நாட்டின் தன்னம்பிக்கையையும், பெருமையையும் வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

இந்த நாய் சிலை திறந்துவைக்கப்பட்ட பொழுது ஒரு சிறுவனுக்கு இந்த அலாப இன நாய் ஒன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் அகல்தெக எனும் பந்தயக் குதிரையும் வழங்கப்பட்டது. இந்த இன குதிரையின் மீது அலாதியான ஆசை கொண்ட அந்நாட்டு அதிபர், கடந்த 2015ம் ஆண்டு தான் அந்த குதிரையை ஓட்டுவது போல தங்க சிலை ஒன்றையும் திறந்து வைத்துள்ளார்.

துருக்மெனிஸ்தான் நாட்டு மக்கள் மிக மோசமான வறுமையில் வாடி வருவதாக கூறப்படுகிறது. அங்கு பத்திரிகை சுதந்திரம்  கிடையாது. இந்த நிலையில் அந்நாட்டின் அதிபர் நாய் ஒன்றின் 19 அடி தங்க சிலையை திறந்து வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்