துருக்கி பூகம்பம்.. இடிபாடுகளில் சிக்கிய இளைஞர்.. உயிரை காப்பாத்திய வாட்சப் ஸ்டேட்டஸ்..!
முகப்பு > செய்திகள் > உலகம்துருக்கியில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட இளைஞர் ஒருவர் வாட்சப் ஸ்டேட்டஸ் மூலமாக பத்திரமாக மீட்கப்பட்டிருகிறார்.
Images are subject to © copyright to their respective owners.
மத்திய கிழக்கு நாடான துருக்கியில் கடந்த வார திங்கட்கிழமை காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் தென் மத்திய பகுதியில் உள்ள கசியான்டெப் நகருக்கு அருகே இந்த நிலநடுக்க மையம் இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் அந்நாடே ஸ்தம்பித்துப்போனது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கையும் ஒருபக்கம் அதிகரித்து வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
இந்த சூழ்நிலையில் கிழக்கு துருக்கி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் வாட்சப் ஸ்டேட்டஸ் மூலமாக இடிபாடுகளில் இருந்து அதிகாரிகளால் காப்பாற்றப்பட்டிருகிறார். துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தை சேர்ந்தவர் போரான் குப்பட். 20 வயதான இவர் கடந்த திங்கட்கிழமை கிழக்கு துருக்கியில் உள்ள தனது உறவினர்களை சந்திக்க சென்றிருக்கிறார். முதல் முறை பூகம்பத்தில் இருந்து பத்திரமாக தப்பித்த போரான் அடுத்த நிலநடுக்கத்தின் போது துரதிருஷ்டவசமாக சிக்கிக்கொண்டார்.
தனது தாய், பாட்டி மற்றும் உறவினர்களுடன் அவர் தங்கியிருந்த வீட்டு பூகம்பத்தால் அப்படியே தரைமட்டமானது. இடிபாடுகளுக்குள் சிக்கிய போரான் மயக்கத்தில் இருந்து மீண்ட உடன் தன்னிடம் இருந்த செல்போன் மூலம் மீட்புப் படைக்கு தகவல் கொடுக்க நினைத்திருக்கிறார். இதனை தொடர்ந்து வாட்சப் மூலமாக ஸ்டேட்டஸ் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
தன்னுடைய பெயர், தான் சிக்கி இருந்த கட்டிடம் ஆகிய முகவரிகளை தெளிவாக குறிப்பிட்டு,"இந்த வீடியோவை யாரேனும் பார்த்தீர்கள் என்றால் தயவு செய்து உதவவும்" என உருக்கமாக கோரிக்கை வைத்திருந்தார். கொஞ்ச நேரத்தில் இது மீட்புப் படை அதிகாரிகளுக்கு தெரிய வந்திருக்கிறது. அதன் பலனாக போரான் மீட்கப்பட்டிருக்கிறார். இருப்பினும் அவருடைய உறவினர்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாகவும் அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருக்கிறார் போரான்.
Also Read | "இன்டர்நேஷனல் மேட்ச்ல கூட இப்டி நடந்ததில்ல போலயே".. சச்சினையே மிரள வெச்ச ஃபீல்டர்.. வைரல் வீடியோ!!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நாங்க இருக்கோம்.. துணிச்சலாக களத்தில் இறங்கிய இந்திய பெண் அதிகாரி.. துருக்கி பெண் காட்டிய பாசம்.. இந்திய ராணுவம் பகிர்ந்த புகைப்படம்..!
- "இனி அது என் குழந்தை".. சிரியா பூகம்பத்தின் போது பிறந்த 'மிராக்கிள்'.. உயிரை கொடுத்து காப்பாத்திய டாக்டரின் நெகிழ வைக்கும் செயல்..!
- கலங்கிப்போன மக்கள்..! இனி வரப்போற நாட்கள் ரொம்ப முக்கியம்.. துருக்கிக்கு ஐநா கொடுத்த அலெர்ட்..
- "இந்தியாலயும் நிலநடுக்கம் இருக்குமா?".. துருக்கி பூகம்பத்தை முன்பே கணிச்ச நிபுணர் சொன்ன பரபர தகவல்!!
- "கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்".. துருக்கியை புரட்டிப்போட்ட பூகம்பம்.. கவிப்பேரரசு வைரமுத்து பகிர்ந்த உருக்கமான கவிதை..!
- “பெரும் உயிரிழப்புகள், அழிவுகள் வேதனை அளிக்கிறது” - துருக்கி நிலநடுக்கம்.. முதல்வர் ஸ்டாலின் உருக்கம்.!
- உருக்குலைந்த 2200 வருச பழமையான கோட்டை.. உலகையே கதிகலங்க வெச்ச நிலநடுக்கம்!!
- துருக்கியை நிலைகுலைய செய்த பூகம்பம்.. 2400 பேர் பலி.. நிவாரண பொருட்கள் & மீட்பு படையை அனுப்பும் இந்தியா.. முழு விபரம்..!
- "என் மனைவி அப்படி சொன்னத நம்ப முடியல".. குஜராத் பெண் பேசியதை தொடர்ந்து தென்காசி இளைஞர் சொன்னது என்ன.?
- குடிநீர் தொட்டியில் மிதந்த சடலம்! இன்னொரு பக்கம் 7 நாட்களாக காணாமல் போயிருந்த இளைஞர்... கடலூரை நடுங்கவைத்த சம்பவம்.!!