நாங்க இருக்கோம்.. துணிச்சலாக களத்தில் இறங்கிய இந்திய பெண் அதிகாரி.. துருக்கி பெண் காட்டிய பாசம்.. இந்திய ராணுவம் பகிர்ந்த புகைப்படம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அடுத்தடுத்த பூகம்பங்களினால் நிலைகுலைந்து போய் உள்ள துருக்கியில் இந்திய மீட்பு படையினர் தொடர்ந்து உதவிகளை செய்து வருகின்றனர்.

Advertising
>
Advertising

                          Images are subject to © copyright to their respective owners.

Also Read | "இனி அது என் குழந்தை".. சிரியா பூகம்பத்தின் போது பிறந்த 'மிராக்கிள்'.. உயிரை கொடுத்து காப்பாத்திய டாக்டரின் நெகிழ வைக்கும் செயல்..!

மத்திய கிழக்கு நாடான துருக்கியில் கடந்த திங்கட்கிழமை காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் தென் மத்திய பகுதியில் உள்ள கசியான்டெப் நகருக்கு அருகே இந்த நிலநடுக்க மையம் இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் அந்நாடே ஸ்தம்பித்துப்போனது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கையும் ஒருபக்கம் அதிகரித்து வருகிறது.

இதனிடையே கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்தில் இந்தியா துருக்கிக்கு உதவும் என பிரதமர் மோடி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு குழு, மருத்துவ குழுவினர் ஆகியோர் தனி விமான மூலமாக துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து மருத்துவ உபகரணங்கள் மற்றும் நிவாரண பொருட்கள் ஆகியவையும் அனுப்பப்பட்டன. துருக்கியின் ஹடாய் நகரில் இந்திய ராணுவம் அவசரகால மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இந்திய ராணுவம் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில் வயதான துருக்கிய பெண் ஒருவர் இந்திய பெண் அதிகாரியை கட்டி அணைத்து முத்தமிடுகிறார். பூகம்பங்களினால் பாதிக்கப்பட்ட தனது நாட்டு மக்களுக்கு உதவி செய்த பெண் அதிகாரியை பாராட்டும் விதமாக அந்த மூதாட்டி செய்த இந்தச் செயல் அங்கிருந்த அனைவரையும் நெகிழச் செய்திருக்கிறது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வியாழக்கிழமை இந்தியாவில் இருந்து ஆறாவது தனி விமானம் துருக்கிக்கு அனுப்பப்பட்டதாக அறிவித்திருக்கிறார். இதிலும் மீட்பு படை மோப்பநாய் பிரிவு, மருந்துகள் ஆகியவை அனுப்பப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார். துருக்கியின் ஹடாய் நகரில் எக்ஸ்ரே மற்றும் ஆய்வக வசதிகளுடன் கூடிய மருத்துவமனையை இந்திய ராணுவம் நடத்தி வருவதாகவும் அவர் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்தியாவின் இந்த மனிதாபிமான செயலுக்கு துருக்கி அரசு அதிகாரிகள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Also Read | தவளை கல்யாணம் கூட கேள்விப்பட்டுருக்கோம்.. ஆனா இது புதுசா இருக்குப்பா.. விநோத சம்பவம்..!

TURKEY EARTHQUAKE, TURKEY WOMAN, HUG, INDIAN WOMAN OFFICER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்