BIG BREAKING :'துருக்கியில் அதிபயங்கர நிலநடுக்கம்...' 'அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து சரிந்தன...' - கடல்நீர் ஊருக்குள் புகுந்தது...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

துருக்கியில் இன்று (30-10-2020) மாலை 7.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

துருக்கியின் மேற்கு மாகாணமான இஸ்மிர் அருகே ஏஜியன் கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடங்கள் கடுமையாக அதிர்ந்தன. இதனால் அச்சமடைந்த குடியிருப்பு வாசிகள் கட்டடத்தை விட்டு வேகமாக வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

பயராக்லி மாவட்டத்தில் மட்டும் குறைந்தது 20 கட்டடங்கள் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த அதிபயங்கர நிலநடுக்கத்தால் கரையோர பகுதிகளில் கடல் நீர் வேகமாக புகுந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் ஏற்பட்ட சேதங்கள் குறித்து கணக்கிடப்பட்டு வருவதாக இயற்கை பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்