VIDEO: 'ஓவரா மொக்கை போட்டுட்டு இருக்காரு!.. அட போங்கப்பா'!.. விழா மேடையில் கோபமடைந்த சுட்டிப் பையன்... ஜனாதிபதி முன்பு செய்த சேட்டை!.. வைரல்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

துருக்கியில் ஜனாதிபதி திறந்து வைக்க இருந்த நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை பல மணி நேரம் காத்திருந்த சிறுவன் பொறுமை தாங்காமல் செய்த சம்பவம் அனைவரையும் நகைப்பில் ஆழ்த்தியது.

அரசு சார்பில் ஏதாவது சாலைகள், பாலங்கள், சுரங்கப்பாதை கட்டப்பட்டு திறக்கப்படுகிறது என்றால் அதில் சிறப்பு விருந்தினராக அந்நாட்டின் முக்கிய தலைவர்கள், ஜனாதிபதி அந்தஸ்தில் உள்ளவர்கள் திறந்து வைப்பது வழக்கம்.

அதோடு பெரும்பாலான நிகழ்ச்சிகளில் குழந்தைகள் பூங்கொத்து கொடுத்து விருந்தினரை வரவேற்பதோடு நிகழ்ச்சியின் இறுதி வரை அவர்கள் அருகிலேயே நின்று விழாவினைச் சிறப்பிப்பார்கள். அப்படி ஒரு நிகழ்வு தான் துருக்கியில் அரங்கேறியுள்ளது.

ஆனால், இங்கு இடம்பெற்ற சற்று வித்தியாசமான நிகழ்வு அனைவரையும் நகைப்பில் ஆழ்த்தியது. துருக்கியில் பல கோடி ரூபாய் செலவில், நெடுஞ்சாலை சுரங்கப்பாதை கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.

இதைத் திறந்து வைப்பதற்காக துருக்கி நாட்டின் அதிபர் தயிப் எர்டோகன் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். மேலும், அவரை நிகழ்ச்சிக்கு வரவேற்பதற்காக குழந்தைகள் மேடையில் காத்திருத்தனர்.

வழக்கம் போல ரிப்பன் வெட்டி திறந்து வைப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. அப்போது அதிபர் விழாவில் பேசிக்கொண்டிருந்த வேளையில், பொறுமை தாங்காமல் இருந்த சுட்டிப்பையன் ஒருவர், தன் கைகளாலேயே ரிப்பன் வெட்டி திறப்பு விழாவை நடத்திவிட்டார்.

இதனைப்பார்த்த ஜனாதிபதி சிரித்துக்கொண்டே என்ன செய்தாய்? என்று தலையில் தட்டி செல்லமாகத் திட்டினார்.

சிறுவனின் இந்த செயல் விழாவில் இருந்த அனைவரையும் நகைப்பில் ஆழ்த்தியது. இதையடுத்து அதிகாரப் பூர்வமாக மீண்டும் ஒரு முறை சுரங்கப்பாதையை ஜனாதிபதி தயிப் எர்டோகன் திறந்து வைத்தார். இந்நிலையில், இது குறித்த காணொளி தற்பொழுது வைரலாகியுள்ளது.

 

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்