'ஒன்றரை வருஷம்' எல்லாம் 'காத்திருக்க முடியாது...' 'அதிபர் தேர்தல்' சீக்கிரம் வரப் போகுது... 'உடனடியா' மருந்தை 'கண்டுபிடிங்க...' 'விரட்டும் ட்ரம்ப்...'
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசி கொண்டுவர டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நவம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருவதற்குள், கொரோனா தடுப்பூசியை கொண்டு வந்து விட வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப், அதிகாரிகளை முடுக்கி விட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் இதுவரை 21 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளது, உயிர்பலியும் 1 லட்சத்து 17 ஆயிரத்தை கடந்துள்ளது என்று அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையம் புள்ளி விவரம் தருகிறது.
கொரோனா வைரஸ் பரவலை சரியாக கையாளவில்லை என்று அதிபர் டிரம்ப் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. கொரோனாவுக்கு பின்னர் அவரது செல்வாக்கு சரிந்துவருவதையும் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.
இந்த நிலையில் வரும் நவம்பர் 3-ந் தேதி அங்கு ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. தேர்தலுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசியை கொண்டு வந்து கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.
கொரோனாவை வீழ்த்தாவிட்டால், அது தனக்கு எதிராக அதிபர் தேர்தலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்ற எண்ணமும் அவருக்கு இருக்கிறது. அந்த வகையில், கொரோனா தடுப்பூசியை விரைவில் பயன்பாட்டககு கொண்டு வருவதில் காலக்கெடுவை விதித்து சுகாதாரத்துறை அதிகாரிகளை அவர் முடுக்கி விட்டுள்ளார்.
மேலும், கொரோனா தடுப்பூசியை விரைவாக கொண்டு வர ‘ஆபரேஷன் வார்ப் ஸ்பீட்’ என்ற திட்டத்தை ஏற்படுத்தி அதற்கு சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை மந்திரி அலெக்ஸ் அசாரை ஜனாதிபதி டிரம்ப் மேற்பார்வையிட வைத்துள்ளார். அலெக்ஸ் அசாருடன் ராணுவ அமைச்சர் மார்க் எஸ்பரும் இதில் இணைந்து செயல்படுகிறார்.
கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு முடிவு கட்ட இந்த ஆண்டின் இறுதிக்குள் தடுப்பூசியை பெற வேண்டும் என டிரம்ப் விரும்புகிறார் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறுகின்றனர்.
டிரம்பின் இந்த காலக்கெடு கொரோனா தடுப்பூசியை முழுமையான பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு முன்பாக ஒருவித மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டை அங்கீகரிக்குமாறு கட்டுப்பாட்டாளர்களை கடுமையான அழுத்தத்துக்கு ஆளாக்கும் என்ற கவலையும் விஞ்ஞானிகள் மத்தியில் எழுந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பிளாஸ்மா' செல்களில் உள்ள 'Y வடிவ' புரதம்... 'கொரோனா' சிகிச்சையில் 'புரட்சியை' உண்டாக்கும்... 'அமெரிக்க விஞ்ஞானிகளின்' புதிய கண்டுபிடிப்பு...
- "இந்த கொரோனா நேரத்துலயும், நெஞ்சுல பாலை வார்த்துட்டாங்க!"... 22 பில்லியன் டாலர் முதலீட்டில் அசத்திய 155 இந்திய நிறுவனங்கள்! .. நெகிழ்ந்துபோன அமெரிக்க வாழ் இந்தியர்கள்!
- "டிரம்ப் தோல்வியை தாங்கிக்க மாட்டார். தோத்துட்டா வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற மாட்டேனு அடம் புடிப்பார்!"- ஜோ பிடன் குற்றச்சாட்டுக்கு டிரம்ப்பின் வைரல் பதில்!
- அதிகரிக்கும் 'கொரோனா' பாதிப்பு... '103 வயசுல' என்னால முடிஞ்ச 'உதவி'... உலககத்தையே திரும்பி பார்க்க வைத்த 'அசத்தல்' தாத்தா!
- உங்க 'இஷ்டத்துக்கு' பண்ணிட்டு இருக்கீங்க... இது எல்லாம் 'நல்லதுக்கில்ல'... சொந்த 'கட்சியில்' கிளம்பிய 'எதிர்ப்புக்' குரல்!
- சொன்ன மாதிரி 'கன்ட்ரோல்' பண்ணிட்டீங்க... ரொம்ப 'தேங்க்ஸ்'... 'டிரம்ப்' ட்விட்டர் பதிவால்... மீண்டும் 'கடுப்பான' மக்கள்!
- போராட்டத்தால 'ஏரியா' ஃபுல்லா குப்பையா கெடக்கு... 10 மணி நேரம், ஒன் மேன் ஆர்மியாக... அசத்திய 18 வயது இளைஞர்!
- 'அமெரிக்காவ மட்டும் சொல்றீங்க'... 'இந்தியா, சீனாவுல இத பண்ணுங்க, அப்ப தெரியும்'... டிரம்ப் அதிரடி!
- 'அமெரிக்க எழுத்தாளரை' பலாத்காரம் செய்த 'பாக். அமைச்சர்...' 'ஃபேஸ்புக் நேரலையில்' பகிரங்க 'குற்றச்சாட்டு...' 'பரபரப்பை' ஏற்படுத்திய 'நேரலை வீடியோ...'
- VIDEO : '75 வயது' முதியவரை... பிடித்து கீழே தள்ளிய 'அமெரிக்க' போலீசார்... "கீழ விழுந்ததுல அவருக்கு"... மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்திய 'சம்பவம்'!