வலுக்கும் 'போராட்டம்'... இது "சரிப்பட்டு" வராது... 'ராணுவத்த எறக்கிட வேண்டியது தான்'... சீறும் 'டிரம்ப்'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் மின்னசோட்டா மாநிலத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதியன்று  கருப்பர் இனத்தை சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவர் போலீஸ்காரர் ஒருவரால் பொது இடத்தில் வைத்துக் கொலை செய்யப்பட்டார். தனது காலால் ஜார்ஜை அழுத்தியதில் ஜார்ஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertising
Advertising

இதுதொடர்பாக வீடியோ ஒன்று வெளியாக நாடு முழுவதும் இந்த கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டக் களத்தில் குதித்தனர். பல இடங்களில் வன்முறையும் வெடித்தது. மேலும், வெள்ளை மாளிகையையும் பொது மக்கள் சூழ்ந்து கொண்டு போராட்டத்தை நடத்தினர். இனவெறிக்கு எதிராக இந்த போராட்டம் அமெரிக்கா முழுவதும் வெடித்த நிலையில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் நம்பிக்கையளிக்கும் வகையில் எந்தவித தகவலையும் வெளியிடவில்லை.

மாறாக, போராட்டக்காரர்கள் அத்து மீறுவதை தன்னால் தாங்கி கொள்ள முடியாது என்றும், ராணுவத்தின் உதவியுடன் போராட்டத்தை நிறுத்தி விடுவேன் என்றும் கூறியுள்ளார். மேலும், அனைத்து ஆளுநர்களிடம் தங்களது அதிகாரத்தை கொண்டு போராட்டக்காரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார்.

டிரம்ப்பின் இந்த கருத்திற்கு அமெரிக்க போலீசார் ஒருவர், டிரம்ப் இந்த போராட்டத்தில் மிகவும் பொறுப்பற்று நடந்து கொள்வதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்