கொரோனா சிகிச்சைக்கு... புது ஐடியா கொடுத்த ட்ரம்ப்!.. மருத்துவர்கள் கடும் கண்டனம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா சிகிச்சையில், கிருமிநாசினியை பாதிக்கப்பட்டவரின் உடலுக்குள் செலுத்தி முயற்சிக்கலாம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகிலேயே அதிகமான கொரோனா பாதிப்புகளை சந்தித்த நாடாக அமெரிக்கா இருக்கிறது. அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மேலும், இதுவரை 8 லட்சத்து 79 ஆயிரத்து 529 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ட்ரம்ப், "கொரோனா வைரஸ் அதிகமான வெப்ப நிலை மற்றும் ஈரப்பதமான சூழலில் உயிர் வாழாது என்று ஆய்வு முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. சூரியனின் ஊதா கதிர்களை உடலுக்குள் செலுத்தி, அதனை பரிசோதனை செய்ய முடியுமா என்று பார்க்க வேண்டும்".

மேலும், "அந்த வகையில் கிருமி நாசினியை பாதிக்கப்பட்டவரின் உடலுக்குள் செலுத்தி சுத்தம் செய்வதன் மூலம், கொரோனாவை அழிக்க முடியுமா என்பதை ஆராய்ச்சி செய்ய வேண்டும். அதுவும் ஸ்வாரஸ்யமாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

அமெரிக்க அதிபரின் இந்த கூற்று, மருத்துவ நிபுணர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்