'மத்த' நாடுகளை விட... நாங்க இத 'அதிகமாவே' செய்றோம்... அதனால தான் எங்களுக்கு 'பாதிப்பு' அதிகம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸ் காரணமாக ஏறக்குறைய அனைத்து உலக நாடுகளும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. உலகளவில் சுமார் முப்பது லட்சம் பேர் வரை கொரோனா வைரஸ் மூலம்  பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவில் மட்டும் சுமார் 10 லட்சம் பேர் வரை இந்த கொடிய வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே போல உயிரிழப்பும் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் அமெரிக்காவில் தான் அதிகம். அறுபது ஆயிரத்தை தாண்டி உயிரிழப்பு சென்று கொண்டிருக்கும் வேளையில் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி மாகாணங்கள் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. நிலைமையை சமாளிக்க முடியாமல் அமெரிக்கா திணறி வரும் நிலையில் அமெரிக்காவில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருவதற்கான காரணத்தை அமெரிக்கா அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

'மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் அமெரிக்கா அதிக அளவில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகிறது. அதனால் தான் 10 லட்சத்திற்கும் மேல் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற நாடுகள் பரிசோதனை செய்வதில் பின்தங்கி இருப்பதால் தான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது' என ட்வீட் செய்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்