'அடுத்த 30 நாட்களுக்கு இதுதான் நிலவரம்...' 'இதுல இருந்து தப்பிக்க எந்த மந்திர புல்லட்டும் இல்ல...' வெள்ளை மாளிகை அறிவிப்பு...!
முகப்பு > செய்திகள் > உலகம்அடுத்த இரண்டு வாரங்கள் அமெரிக்காவிற்கு மிகுந்த வலியை தரும் நாட்களாக இருக்கும் என அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸிற்கு அதிக பாதிக்கப்பட்டோரின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது அமெரிக்கா. இதை அடுத்து முதல் முறையாக கொரோனா வைரஸ் பரவும் வீதம் பற்றி இன்று காலை வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்க மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மக்களிடம் காணொளி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சுமார் ஒன்று முதல் இரண்டு லட்சம் வரை அமெரிக்காவில் பலியாவதை நாம் எதிர்கொண்டுள்ள உள்ளோம் இதை தடுக்க சமூக விலகல் தான் ஒரே வழி எனவும் தெரிவித்துள்ளனர்.
வெள்ளை மாளிகை கரோனா ரெஸ்பான்ஸ் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் டெபோரா பிரிக்ஸ் கூறும்போது, “நாம் கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க எந்த மந்திர புல்லட் இல்லை, மந்திர வாக்சைனும் இல்லை. நம் நடத்தைகள்தான் தீர்மானிக்கிறது. இதுதான் அடுத்த 30 நாட்களுக்கான நிலவரம்.” என்று கூறியுள்ளார்.
அதையடுத்து பேசிய டாக்டர் ஆண்டனி ஃபாஸி “நாம் பெரிய அளவிலான மரண எண்ணிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் அதற்க்காக நாம் அனைவரும் நம் மனதை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். இதுவரை ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு கணக்கிடப்பட்ட கணிப்புதான் என்றாலும் இது தான் தற்போதைய நிலைமை. நாம் அதற்குத் தயாராக இருக்க வேண்டும். ஆனால் இந்த அளவு பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்க படுகிறது ஆனால் இதை தடுக்க முழுவதும் பாடுபடுவோம்' என்று கூறியுள்ளார்.
“ 6 அடி இடைவெளியை அமெரிக்க மக்கள் எங்கு சென்றாலும் கடைப்பிடிக்க வேண்டும். இதன் மூலம் வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த முடியும். இதன் காரணமாக தான் அமெரிக்காவில் இன்னும் நாங்கள் முழு அடைப்பை பரிந்துரை செய்யவில்லை” என்று டாக்டர் பர்க்ஸ் கூறியுள்ளார்.
இத்தாலியை உதாரணம் காட்டிய டெபோரா பர்க்ஸ், அங்கு மக்கள் சமூக விலகலை கடைபிடித்தால் தான் தற்போது புதிய தொற்றுகள் அங்கு குறைந்து வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சுகாதார அளவியல் மற்றும் மதிப்பிட்டு நிறுவனமான IHME ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் அமெரிக்காவில் கரோனா பலி எண்ணிக்கை 84,000த்தை தொட்டுவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது ஏப்ரல் 15 முதல் தினசரி ஏற்பட்டு வரும் மரண எண்ணிக்கையிலிருந்து இவ்வாறு கணிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '1 லட்சத்துக்கு மேல் பாதிப்பு'...'சுகாதார நிபுணர்களின் ரிப்போர்ட்'... முதல் முறையா அச்சப்பட்ட 'டிரம்ப்'!
- "மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புங்கள்..." 'இது போன வாரம்...' "அமெரிக்காவிலிருந்து யாரும் மெக்சிகோவிற்குள் வரக்கூடாது..." 'இது இந்த வாரம்...' 'மாறிய வரலாறு...'
- ‘பரஸ்பர குற்றச்சாட்டு சர்ச்சைக்கு இடையில்’... ‘சீன அதிபருடன், அமெரிக்க அதிபர் திடீர் ஆலோசனை’... வெளியான புதிய தகவல்!
- 'நீங்க பண்ண தப்புனால உலகமே கஷ்டப்படுது!'... கொந்தளித்த ட்ரம்ப்!... நடந்தது என்ன?
- “எது சீன வைரஸா?.. ஹலோ எஜ்யூஜ்மீ!!”.. அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்!
- 'கடைசில' என்னையும் அத பண்ண 'வச்சிட்டீங்களே'... 'செலவுதான்' இருந்தாலும் 'அமெரிக்கர்கள்' எல்லோரும் இதை 'பண்ணிக்கோங்க'... அதிபர் 'ட்ரம்ப்' புதிய 'மசோதா'...
- VIDEO: 'நாங்க ஏன் இந்தியா வந்திருக்கோம்னு தெரியுமா?'... அகமதாபாத்தை அதிர வைத்த 'ட்ரம்ப்' பேச்சு!... ஆரவாரம் செய்த மக்கள்!
- 'இந்தியாவில் ட்ரம்ப்!'... 'கையெழுத்தாகும் புதிய ஒப்பந்தங்கள் என்னென்ன?'... சிறப்பு தொகுப்பு!
- 'பாகுபலியாக' ட்ரம்ப்... தேவசேனாவாக 'மெலனியா'... அட்டகாச வீடியோவுக்கு 'லைக்' கொடுத்து 'ஷேர்' செய்த 'ட்ரம்ப்'...
- 'தண்ணீர்' இல்லாத கழிவறைக்கு அலங்காரமா ஒரு 'தோரணம்' ... இதை கட்றதுக்கு 'வாஷிங்டன்னிலிருந்து' தொழில்நுட்பக் குழு வேற... புலம்பும் 'ட்ரம்ப்' கிராம மக்கள்...