'அமெரிக்கா வந்த இளவரசர் ஹாரி - மேகன் தம்பதி!'... முகத்தில் அடித்தாற்போல் நிராகரித்த ட்ரம்ப்!... என்ன நடந்தது?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்கா வந்துள்ள ஹாரி - மேகன் தம்பதியின் பாதுகாப்புச் செலவுகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அரசக் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரியும் அவர் மனைவி மேகனும் அரசக் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாகக் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தனர். தாங்கள் வட அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு இடையில் நேரத்தைச் செலவிட நினைப்பதாகவும் சுதந்திரமாக வாழ நினைப்பதாகவும் தெரிவித்திருந்தனர். இவர்களின் திடீர் அறிவிப்பு இங்கிலாந்து மட்டுமல்லாது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பெரும் சர்ச்சைக்குப் பிறகு, இவர்களது முடிவை ராணி எலிசபெத் ஏற்றுக்கொண்டார். அரச குடும்பத்தின் பொறுப்புகளில் இருந்து விலகுவதற்கு ஒப்புதல் கிடைத்தபின், இருவரும் கனடாவில் தனியாக ஒரு புது வாழ்க்கையைத் தொடங்கினர்.

அதன் பின்னர், கனடாவிலிருந்து மேகனின் சொந்த நாடான அமெரிக்காவுக்கு குடியேறினர். கொரோனா பாதிப்புக்காக அமெரிக்க எல்லை மூடப்படுவதற்கு முன்பாகவே இவர்கள் தனியார் ஜெட் மூலம் கலிஃபோர்னியாவுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் இந்தத் தம்பதிக்கு அரசு செலவில் பாதுகாப்பு வழங்க முடியாது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ``இங்கிலாந்து அரசுக்கும் ராணிக்கும் நான் நெருங்கிய நண்பர். அரசக்குடும்பத்தில் இருந்து வெளியேறிய ஹாரியும் மேகனும் இனி கனடாவில் வசிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது அவர்கள் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு வந்துள்ளனர். அமெரிக்க அரசு அவர்களின் பாதுகாப்புக்காகச் செலவு செய்யாது. அவர்களின் பாதுகாப்பை அவர்களே உறுதி செய்துகொள்ள வேண்டும்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

 

 

CORONA, CORONAVIRUS, USA, DONALDTRUMP, PRINCEHARRY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்