ஒரு ‘கிரேட்’ நியூஸ்.. இதைத்தான் ரொம்ப நாளா எதிர்பார்த்தோம்.. டிரம்ப் ‘அதிரடி’ ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  ‘மிகவும் நல்ல செய்தி’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் 214 தேர்தல் வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் 290 வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார்.

ஆனாலும் தற்போது வரை அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவந்த பின்னர் ஜோ பைடன் அமெரிக்க அதிபராக அதிகாரப்பூர்வமாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தோல்வியடைய சீனாவில் உருவான கொரோனா வைரஸ் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது, கொரோனா தடுப்பூசி விரைவில் தயாராகிவிடும் என வாக்குறுதி கொடுத்தவாறு வாக்கு சேகரிப்பில் டிரம்ப் ஈடுபட்டார்.  ஆனால், அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகும் வரை கொரோனா தடுப்பூசி தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தெரியவந்து 2 நாட்கள் ஆகியுள்ள நிலையில், தற்போது அமெரிக்காவின் ஃபிப்சர் மருந்து நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் மருந்து நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் இறுதி கட்ட ஆய்வு முடிவுகளின் முதல் பகுதி இன்று வெளியாகியுள்ளது.

அதில், இந்த தடுப்பூசி 90 சதவீதம் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கிறது என ஃபிப்சர் மருந்து நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசியில் மிகப்பெரிய அளவில் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. தடுப்பூசி குறித்த அறிவிப்பை ஃபிப்சர் நிறுவனம் வெளியிட்ட சில நிமிடங்களில் பங்குச்சந்தையில் அந்நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘பங்குச்சந்தை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது, தடுப்பூசி மிக விரைவில் வந்துகொண்டிருக்கிறது. தடுப்பூசி 90 சதவீதம் பலனளிக்கிறது. இது மிகவும் நல்ல செய்தி’ என பதிவிட்டுள்ளார். ஆனால் பங்குசந்தை உயர்ந்ததற்கு காரணம் ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்றதனாலதான் என பலரும் டிரம்பின் ட்விட்டர் பதிவை விமர்சனம் செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்