"இந்தியாவும் வரணும்டே!".. 'அதுக்காக இத தள்ளிப்போடுறதுல தப்பே இல்ல!'.. 'பாசக்கார' டிரம்ப் எடுத்த 'பரபரப்பு' முடிவு!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்த வருடம் அமெரிக்கா ஜி-7 மாநாட்டை நடத்துகிறது. ஆனால் செப்டம்பர் மாதத்துக்கு அந்த மாநாடு ஒத்திவைக்கப்படுவதாகவும், அதற்குக் காரணம் இந்த மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் அழைக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீரென அறிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட வளர்ச்சி அடைந்த நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகள் மட்டும் பங்கேற்கும் ஜி-7 மாநாட்டு கூட்டமைப்பில் ஒவ்வொரு நாடுகளின் தலைவர்களும் ஆண்டுக்கு ஒருமுறை கலந்துபேசி பொருளாதாரப் பிரச்சினைகளையும் வர்த்தகம் உள்ளிட்ட பல விஷயங்களையும் பேசி தீர்த்துக் கொள்வது வழக்கம். அவ்வகையில் கடந்த ஆண்டு பிரான்சில் நடந்த ஜி-7 மாநாட்டில் அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான், இந்தியப் பிரதமர் மோடியை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்.
இந்த நிலையில் ஜூன் 10 முதல் 12 ஆம் தேதி வரை அமெரிக்காவில் நடத்துவதற்காக திட்டமிடப்பட்டிருந்த ஜி-7 மாநாட்டு கூட்டமைப்பு, கொரோனா காரணமாக ஜூன் மாத இறுதிக்கு மாற்றப்பட்டிருந்தது. இந்த சூழலில் அந்த மாநாட்டையும் செப்டம்பருக்கு மாற்றி அதிரடியாக முடிவு செய்த டிரம்ப், இந்த மாநாட்டில் இந்தியா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளின் தலைவர்களையும் அழைக்க முடிவு செய்துள்ளதாகவும், காலாவதியான நாடுகளைக் கொண்ட மாநாடு போல் ஜி-7 மாநாடு இதுவரை இருந்ததாகவும், உலகில் என்ன நடக்கிறது என்பதை முறைப்படி வெளிப்படுத்தும் மாநாடாக அது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தமது நாட்டில் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில் ஜி-7 மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் நேற்று அறிவித்துள்ளார். இன்னொருபுறம் வளர்ச்சியடைந்த நாடுகளின் பட்டியலில் இதன்மூலம் இந்தியாவையும் டிரம்ப் அங்கீகரிக்கிறார் என்று கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அமெரிக்காவுக்கு போதாத காலம்... ' 'கருப்பின' விவகாரத்தால் 'தீயாய்' பரவும் 'வன்முறை...' 'வெள்ளை மாளிகை மூடப்பட்டது...'
- 'இனி உங்க நட்பே வேணாம்...' 'துண்டிக்கப்பட்டது உறவு...' 'அமெரிக்க அதிபரின்' அதிரடி 'அறிவிப்பு...'
- "அந்த மாதிரி பண்றவங்கள அங்கயே சுட்டுத் தள்ளுங்க!" - டிரம்ப்பின் வெடிகுண்டு வார்த்தைகளால் 'வெடிக்கும் போராட்டம்'!
- “எங்க பிரச்சனைய நாங்க தீத்துக்குறோம் தலீவா!”.. 'மத்தியஸ்தரம்' செய்ய முன்வந்த டிரம்ப்.. 'சீனா' கொடுத்த பதிலடி!
- 'சீன' மாணவர்களுக்கு 'அடுத்த செக்...' "உளவு பார்த்தது போதும் கிளம்புங்க..." 'விசாவை' ரத்து செய்யும் 'அமெரிக்கா...'
- 'கொரோனாவால்' அதிகமாக பாதிக்கப்பட்ட 'நாடு...' 'அமெரிக்க இல்லை...' இங்கு 'வேறு விதமாக' 'இறப்பு விகிதம்' இருக்கும்...'எச்சரிக்கும் புள்ளி விவரங்கள்...'
- "இந்த மேட்டர்ல அவங்கள எதுக்கு இழுக்குறீங்க?".. 'அங்க சுத்தி இங்க சுத்தி' ட்விட்டர் CEO-விடமே 'வாங்கிக்' கட்டிக்கொண்ட 'டிரம்ப்'!
- 'சீனா'வால அவரு 'மூட் அவுட்'ல இருக்காரு... 'அப்படி' எதுவும் நடக்கல... 'மனுஷன்' சொல்றதுல உண்மையில்ல!
- 'போன மாசம்' மட்டும் 122 மில்லியன் 'இந்தியர்களுக்கு' நேர்ந்த 'பரிதாபம்'!.. அடுத்து, '10 கோடி பேருக்கு' நடக்கப் போகும் 'கொடுமை'!.. பகீர் கிளப்பும் ரிப்போர்ட்ஸ்!
- 'வெட்டுக்கிளிகளை' விரட்ட 'பக்கா பிளான்...' கைகொடுக்கும் நவீன தொழில்நுட்பம்... உட்கார்ந்த இடத்திலிருந்தே பலன்...