'கொரோனாவை' கொல்லும் சிறந்த 'மருந்து' இதுதான்... இந்த மருந்தை 'உடனடியாக' பயன்படுத்துங்கள்... 'வெளிப்படையாக' அறிவித்த 'டொனால்ட் டிரம்ப்'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸுக்கு எதிரான சிறந்த மருந்து எது என்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க மருந்துத்துறை பரிந்துரைத்த இந்த மருந்தை உடனடியாக பாதிக்கப்பட்ட அனைவரும் பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை இரண்டரை லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை நிலவரப்படி, சிகிச்சை பலனின்றி பலியானவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 737 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 18-ம் தேதி வெளியிட்டிருந்த அறிவிப்பில் ஒரு முக்கியமான தகவல் தொடர்பாக விரைவில் செய்தியாளர்களை சந்திப்பேன் என குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடிக் கொல்லும் மருந்துகளின் பெயரை அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துப்பொருள் கட்டுப்பாட்டுத்துறையிடம் இருந்து வந்த இந்த தகவலின்படி, ஹைட்ரோசைக்லோரோகுவைன் மற்றும் அஸித்ரோமைசின் (HYDROXYCHLOROQUINE & AZITHROMYCIN) ஆகிய இரு மருந்துகளை ஒன்றாக சேர்த்து உட்கொண்டு வந்தால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகச்சிறந்த மாற்றங்களை ஏற்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த மருந்துகள் தற்போது நம்மிடம் உள்ளவற்றில், கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் சிறந்த மருந்துகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை கண்டுபிடித்து பரிந்துரைத்ததற்காக அமெரிக்க மருந்துத்துறைக்கு தனது பாராட்டுக்களையும், நன்றிகளையும் கூறியுள்ளார்.

மேலும், மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மருந்தை உடனடியாக பயன்படுத்துங்கள்! விரைவாக செயல்படுங்கள்! கடவுள் எல்லோரையும் ஆசீர்வதிக்கட்டும் எனவும் தனது அடுத்த டுவிட்டர் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

CORONA, AMERICA, DONALD TRUMP, BEST MEDICINE, GAME CHANGER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்