‘நான் அமெரிக்க அதிபர்’... ‘என்கிட்ட நீங்க இப்டி எல்லாம் பேசக் கூடாது’... ‘ஆவேசமடைந்த அதிபர் ட்ரம்ப்’...!!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நான் அமெரிக்க அதிபர் என்னுடன் ஒரு போதும் அப்படி பேச வேண்டாம் என டொனால்ட் டிரம்ப் செய்தியாளரிடம் ஆவேசமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 3-ம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்பும், ஜோ பிடனும் போட்டியிட்டனர். இதில் ஜோ பிடன் வெற்றி பெற்றார். எனினும் இதை ட்ரம்ப் ஏற்க மறுத்து ஜோ பிடன் மீது தேர்தல் மோசடி புகாரை கூறி வருகிறார். மேலும் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற மறுத்து வருகிறார். இந்த நிலையில் ராய்ட்டர்ஸ் வெள்ளை மாளிகையில், செய்தியாளர் ஜெஃப் மேசன், ‘அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஜோ பிடனுக்கு எதிரான உங்களது தோல்வியை ஒப்புக் கொள்கிறீர்களா’ என ட்ரம்பை பார்த்து பல முறை கேட்டார்.

இதனால் ட்ரம்பிற்கு கோபம் உச்சத்திற்கு சென்று ஆவேசமடைந்தார். பின்னர் ‘நான் அமெரிக்காவின் அதிபர். என்னிடம் ஒரு போதும் அப்படி பேச வேண்டாம். நான் தேர்தலில் தோல்வி அடையவில்லை. இது மோசமான தேர்தல். 3 ஆவது உலக போரை போன்ற தேர்தல் ஆகும். வாக்காளர் மோசடி காரணமாக ஜோ வெற்றி பெற்றார். நிச்சயமாக ஜோபிடனால் 80 மில்லியன் வாக்குகளை எடுத்திருக்க முடியாது’ என்று தான் தேர்தலில் தோல்வி அடையவில்லை என்று விளக்கினார் அதிபர் ட்ரம்ப்.

வழக்கமாக, தனது 4 ஆண்டு அதிபர் காலத்தில் நடந்த பல சம்பவங்களைப் போலவே இந்த முறையும் டிரம்ப் கடினமாக கேள்விகளை யாரேனும் செய்தியாளர் கேட்டால் கோபமடைந்து புறக்கணிப்பது போல் தற்போதும் கோபமடைந்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்