"இந்த சின்ன கூட்டத்த வெச்சுலாம்.. எங்களை ஒன்னும் பண்ண முடியாது!" - மீண்டும் கட்டையைப் போடும் சீனா!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்கா சீனாவை கடுமையாக குற்றம் சாட்டி வரும் நிலையில் உலகளவில் சீனாவை தனிமைப்படுத்தும் விதமாக ஜி-7 மாநாட்டை பயன்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக கருத்துகள் எழுந்துள்ளன. 

Advertising
Advertising

அதன்படி இந்தியாவும் ரஷ்யாவும் ஜி-7 மாநாட்டில் இணைய வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கோரிக்கை வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த பட்டியலில் அவுஸ்திரேலியாவும் இணைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.  கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட இந்த ஜி-7 மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் மோடிக்கு தொலைபேசி மூலம் டிரம்ப் அழைப்பு விடுத்ததாகவும் இந்தியாவும் இந்த அழைப்பை ஏற்றுள்ளதாகவும் தெரிகிறது. இந்த முடிவு சீனாவுக்குப் பெரும் அதிர்ச்சி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஷாவோ லிஜியன் கூறுகையில் “அமெரிக்காவின் திட்டம் எங்களுக்கு நன்றாகவே புரிகிறது. சீனாவை தனிமைப்படுத்த நினைக்கும் அமெரிக்காவின் திட்டம் பலிக்காது. ஜி-7 நாடுகள் கூட்டமைப்பு என்பது உலக அமைதி குறித்துதான் சிந்திக்க வேண்டும். உலக ஒற்றுமைக்கு வித்திட்டு அமைதிக்கான உடன்படிக்கையை செய்ய வேண்டும். அமெரிக்கா திட்டமிடும் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தும் விதமாக இருக்கக்கூடாது” என்று கூறியுள்ளார்.

மேலும் தங்களுக்கு உலக நாடுகளின் ஆதரவு இருப்பதாகவும், இதனால் சீனாவிற்கு எதிராக ஒரு சிறிய கூட்டம் செயல்பட முடியாது என்றும், சீனாவிற்கு எதிராக இப்படி சிறிய வட்டத்தை உருவாக்கினால் அது தோல்வியில்தான் முடியும் என்றும், அப்படிப்பட்ட வட்டம் பெரிய அளவில் வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் சீனா தெரிவித்துள்ளது. அதாவது இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை ஜி-7 குழுவில் சேர்ப்பது எந்த விதத்திலும் அமெரிக்காவுக்கு வெற்றியை பெற்றுத் தராது என்று சீனா சூசகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்