"உண்மையாவே தாஜ்மஹால் உலக அதிசயம் தான்".. எலான் மஸ்க் போட்ட ட்வீட்.. இந்திய தொழிலதிபர் வச்ச வேற லெவல் கோரிக்கை..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலக பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹால் குறித்து டிவிட் செய்திருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | தாலி கட்டும்போது ஏற்பட்ட பவர் கட்.. "அய்யய்யோ தாலிய மாத்தி கட்டிட்டீங்க".. பதறிய சொந்தங்கள்.. ஒரே நொடியில் மாறிப்போன வாழக்கை..!

எலான் மஸ்க்

அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். பின்னர் அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் வாங்க இருப்பதாக அறிவித்திருந்த வேளையில் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அந்த நிறுவனத்தை முழுவதுமாக வாங்கியுள்ளார் மஸ்க்.

தாஜ்மஹால்

உங்க அதிசயங்களுள் ஒன்றாக கருதப்படும் தாஜ்மஹால் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் எலான் மஸ்க்," உண்மையாகவே தாஜ்மஹால் ஒரு உலக அதிசய தான்" எனக் குறிப்பிட்டு உள்ளார். இது தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

டிவிட்டர் பக்கத்தில் ஆக்ராவில் உள்ள செங்கோட்டையின் முகப்பு படத்தை ஒருவர் பகிர அதில் கமெண்ட் செய்துள்ள மஸ்க்," இது அருமையாக உள்ளது. நான் 2007 ஆம் ஆண்டு இந்தியா வந்தேன். அப்போது தாஜ்மஹாலை பார்வையிட்டேன். உண்மையாகவே தாஜ்மஹால் ஓர் உலக அதிசயம் தான்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி 

இதனை தொடர்ந்து எலான் மஸ்க்கை குறிப்பிட்டு Paytm நிறுவனர் விஜய் சேகர் தனது டிவிட்டர் பக்கத்தில்,"இந்தியாவிற்கான FSD -ஐ (Full Self-Driving) உருவாக்குவது டெஸ்லாவுக்கு நம்பமுடியாத சவாலாக இருக்கும். நாங்கள் மிகவும் கட்டுக்கடங்காத சாலையைப் பயன்படுத்துபவர்களாக அறியப்படுகிறோம். தாஜ்மஹாலில் டெஸ்லாவை முதலில் டெலிவரி செய்ய நீங்கள் எப்போது இங்கு வருகிறீர்கள்?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

 

உலகத்தின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான மஸ்க் தாஜ்மஹால் குறித்து டிவிட் செய்திருக்கும் நிலையில், Paytm நிறுவனர் விஜய் சேகர் இந்தியா வரும்படி மஸ்க்கிற்கு மறைமுக அழைப்பு விடுத்திருப்பது தற்போது பலராலும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

ELON MUSK, TAJMAHAL, ELON MUSK RECALLS TAJMAHAL TRIP, எலான் மஸ்க், தாஜ்மஹால்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்