அதற்கு எங்க நாட்டுல இடம் இல்லை! முதல் சிறப்பு பிரதிநிதியை அறிவித்த கனடா பிரதமர்..!
முகப்பு > செய்திகள் > உலகம்இஸ்லாமிய வெறுப்புணர்வுக்கு எதிரான கனடாவின் முதல் சிறப்பு பிரதிநிதியை அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார்.
மனித உரிமை வழக்கறிஞர் மற்றும் விருது பெற்றவரும் பிரபல பத்திரிகையாளருமான அமைரா எல்காபி என்பவர் தான், இஸ்லாமிய வெறுப்பை எதிர்த்துப் போராடுவதற்கான கனடாவின் முதல் அதிகாரப்பூர்வ சிறப்புப் பிரதிநிதியாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பிரதமர் வெளியிட்டுள்ளார்.
Image Credit : CBC
இதனைத் தொடர்ந்து பிரதமர் வெளியிட்ட அறிக்கையில், கனடா இஸ்லாமிய சமூகங்களுக்கு தங்கள் அரசு ஆதரவளிப்பதாகவும், இஸ்லாமிய வெறுப்பு, வெறுப்பை தூண்டும் வன்முறை மற்றும் அமைப்பு ரீதியான பாகுபாடுகளைக் கண்டிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் கனேடிய அரசு உறுதிகொண்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக, “இஸ்லாமிய வெறுப்பு, பாகுபாடு எந்த வடிவத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, அதற்கு இந்நாட்டில் இடமில்லை.” என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நியமிக்கப்பட்டுள்ள அமைரா, “கனடா இஸ்லாமியர்களின் மாறுபட்ட மற்றும் குறுக்குவெட்டு அடையாளங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இஸ்லாமியர்களின் கொள்கைகள், சட்ட முன்மொழிவுகள், ஒழுங்குமுறைகளை மேம்படுத்த அரசுக்கு ஆலோசனை வழங்கி, சமத்துவம் மற்றும் பன்முகத்தன்மையை மேம்படுத்தி, தேசிய கட்டமைப்பிற்கு இஸ்லாமியர்களின் முக்கிய பங்களிப்புகள் நீடிக்க அவர் உதவுவார்” என ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
Image Credit : CBC/ File/ Images are subject to © copyright to their respective owner.
இதேபோல், விலைவாசியை கட்டுப் படுத்துவது, சுகாதாரப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுதல், அனைத்து கனேடியர்களுக்கும் வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தை உருவாக்குதல் என பலவற்றில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் தமது இன்னொரு அறிக்கையில் பொதுவான மக்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "அட இது தெரியாம இருந்துட்டேனே".. ஒரே லாட்டரியில் 385 கோடி ரூபாய்.. பெண்ணின் வாழ்க்கையில் நடந்த ட்விஸ்ட்!!
- எட்டு இளம்பெண்களால் உயிரிழந்த நபரா ..? கனடாவை அதிரவைத்த பரபரப்பு சம்பவம்..
- கடன் வாங்கி கனடாவுக்கு படிக்க போன இந்திய மாணவர்.. இரண்டே நாளில் நடந்த துயரம்..
- திடீர்ன்னு வீட்டின் ஜன்னலை தட்டிய பெண்.. திறந்து பார்த்த பிறகு நடந்த சம்பவம்.. "வாழ்க்கையிலேயே இனி மறக்க முடியாதாம்"
- "குற்றவாளி பத்தி துப்பு குடுத்தா 280 கோடியா?".. தம்பதி கொலை வழக்கில் 5 வருசமா நீடிக்கும் மர்மம்!!..
- Alberta : பெற்ற மகளென்று தெரியாமல் மருத்துவம் பார்த்த தாய்.. வீட்டுக்கு வந்த பின்பு வந்து சேர்ந்த துயர செய்தி!
- உருவகேலிக்கு எதிரான கலகக்குரல்.. கனேடிய இந்திய வம்சாவளி டிக்டாக் பிரபலம் 21 வயதில் மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
- 39 ஆண்டுகளுக்கு முன்.. 4 மாத இடைவெளியில் கொலை செய்யப்பட்ட இரண்டு பெண்கள்.. இத்தனை நாள் கழிச்சு வழக்கில் நடந்த ட்விஸ்ட்!!
- "இது சரியில்ல".. கனடா பிரதமரிடம் அச்சுறுத்தும் தொனியில் பேசினரா சீன அதிபர்? வைரல் வீடியோ குறித்து சீனா பரபரப்பு விளக்கம்.! G20 Summit
- மெட்டாவில் வேலை.. ஆசை ஆசையாய் கனடாவுக்கு பறந்த இந்தியர்.. சேர்ந்து 2 நாள்ல காத்திருந்த அதிர்ச்சி.. இளைஞரின் உருக்கமான போஸ்ட்..!