நீங்க 'வீட்டுக்கு' போகலாம்... மொத்தமாக '3000 பேரை'... வேலையை விட்டு நீக்கும் 'பிரபல' நிறுவனம்?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகம் முழுவதும் நிலவிவரும் பொருளாதார மந்தநிலை காரணமாக பிரபல நிறுவனங்கள் பலவும் தங்களது ஊழியர்களை கொத்துக்கொத்தாக வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. ஐடி, ஆட்டோமொபைல் தொடங்கி சேவை நிறுவனங்கள் வரை பல்வேறு நிறுவனங்களையும் இந்த பொருளாதார நீக்கம் ஆட்டிப்படைத்து வருகிறது.

அந்த வகையில் பிரபல நிறுவனங்களில் ஒன்றான எக்ஸ்பீடியா நிறுவனம் தங்களது மொத்த ஊழியர்களில் சுமார் 12% பேரை அதாவது 3000 பேரை வீட்டுக்கு அனுப்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த டிராவல் ஏஜென்சி நிறுவனம் பயணம் தொடர்பான சேவைகளை வழங்கி வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 24,500 பேர் இந்த நிறுவனத்திற்காக வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிறுவனத்தின் நிதிநிலை தொடர்ந்து மோசமாக வீழ்ச்சி கண்டு வருகிறது. டிசம்பர் மாதம் வெளியான நான்காவது காலாண்டு அறிக்கையில் இது வெட்டவெளிச்சாகி இருக்கிறது. அதனால் நிறுவனத்தை மறுசீரமைக்கும் பொருட்டும், சிக்கன நடவடிக்கையாகவும் இந்த வேலை நீக்க நடவடிக்கையை அந்நிறுவனம் மேற்கொள்ள இருப்பதாக  தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்