சூடுபிடிக்கும் ராஜபக்சே சகோதர்களுக்கு எதிரான வழக்கு.. கறார் காட்டிய நீதிபதிகள்.. பரபரப்பில் இலங்கை..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே ஆகியோர் நாட்டை விட்டு வெளியேற விதிக்கப்பட்டிருந்த தடையை மேலும் நீட்டிப்பதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ராஜபக்சே சகோதரர்கள் நாட்டை விட்டு வெளியேற தடை.. உச்ச நீதிமன்றம் அதிரடி.. மீண்டும் பரபரப்பான இலங்கை..இப்ப என்ன ஆச்சு..?

இலங்கை போராட்டம்

22 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட இலங்கை கடந்த  70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அந்நிய செலவாணி கையிருப்பு குறைந்து போனதால் எரிபொருள், உணவு உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் அரசு திணறியது. இதனால் இலங்கையில் மக்கள் போராட்டம் வெடித்த நிலையில் இடைக்கால அதிபராக இருந்த ரணில் விக்ரமசிங்கே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தொடர்ந்து தினேஷ் குணவர்த்தன-வுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டது. இருப்பினும், இன்னும் நிலைமை சீராகவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

வழக்கு

இந்நிலையில், சிலோன் வர்த்தக சம்மேளனத்தை சேர்ந்த சந்திரா ஜயரத்ன, முன்னாள் இலங்கை நீச்சல் சம்பியன் ஜூலியன் பொலிங், ஜெஹான் கனகரத்னா மற்றும் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா அமைப்பு ஆகியவை இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடர்ந்துள்ளனர். அதில், இலங்கையின் பொருளாதார சிக்கலுக்கு வழிவகுத்ததாக இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆளுநராக இருந்த அஜித் நிவார்ட் கப்ரால் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

வெளிநாடு செல்ல தடை

இந்நிலையில், இந்த மூவரும் ஆகஸ்டு 4 ஆம் தேதிவரையில் வெளிநாடு செல்ல தடை விதிப்பதாக இலங்கை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இன்றுடன் தடை முடிவதால், நேற்று இந்த வழக்கு விசாரணை மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில் இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆளுநராக இருந்த அஜித் நிவார்ட் கப்ரால் ஆகியோர் வெளிநாடு விதிக்கப்பட்டிருந்த தடையை ஆகஸ்டு 11 ஆம் தேதிவரையில் நீட்டிப்பதாக உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். இதனால் இலங்கையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

Also Read | காதலித்து திருமணம் செய்துகொண்ட இளம்பெண்.. ஒரே மாசத்துல நடந்த அதிர்ச்சியான சம்பவம்.. காலைல தோட்டத்துக்கு போனவர் கண்ட பயங்கர காட்சி..!

SRILANKA, MAHINDA AND BASIL RAJAPAKSA, TRAVEL BAN, RAJAPAKSA BROTHERS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்