'அவ ஆசை படுறது தப்பில்ல... ஆனா'... 12 வயதிலேயே 'திருநங்கை'யாக மாறிய குழந்தை!.. ஆசையை கேட்டு அதிர்ந்து போன தாய்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பதின் பருவம் தொடங்குவதற்கு முன்பு திருநங்கையாக மாறிய குழந்தைக்கு, சக பெண்களைப் போலவே மார்பகங்கள் வேண்டும் என்ற ஆசை அவரது தாயை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

'அவ ஆசை படுறது தப்பில்ல... ஆனா'... 12 வயதிலேயே 'திருநங்கை'யாக மாறிய குழந்தை!.. ஆசையை கேட்டு அதிர்ந்து போன தாய்!

நியூ யார்க் நகரைச் சேர்ந்த Sally Homer என்ற 44 வயது நிரம்பிய பெண்ணுக்கு, 12 வயதில் Zoey Villa என்ற குழந்தை உள்ளார்.

ஆணாக பிறந்த Zoey Villaக்கு ஹார்மோன்கள் மாற்றத்தால், தன்னை பெண்ணாக உணரத் தொடங்கியுள்ளார்.

                                 trans girl desperate start hormone treatment look like teenage girls

சில வாரங்களிலேயே, இதை தன்னுடைய தாய் Sally Homer-யிடம் Zoey தெரிவித்துள்ளார். முழுமனதுடன் Zoey-இன் முடிவை ஏற்றுக் கொண்ட Sally, பெண்கள் உடுத்தும் ஆடைகள், அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றை வாங்கிக் கொடுத்து, Zoey-க்கு தன்னம்பிக்கை ஊட்டியுள்ளார்.

இந்நிலையில், பதின் பருவத்தை நெருங்கி விட்டதால், ஆணுக்கு உடைய பாலின குணங்கள் மேலோங்கிவிடக் கூடாது என்பதற்காக, hormone blockers-ஐ பயன்படுத்தி வந்துள்ளார் Zoey.

இதற்கிடையே, Zoey-க்கு சக வயதில் இருக்கும் இளம் பெண்கள் போல, தனக்கும் மார்பகங்கள் இருக்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது.

இதனை தாய் Sally-யிடம் கூறிய போது, அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

மேலும், மார்பக வளர்ச்சிக்கு தேவையான oestrogen hormone, 14 வயது நிரம்பிய பின்னர் தான் உட்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து, Zoey வருத்தமடைந்துள்ளார்.

எனினும், Zoey-க்கு அவரது தாய் மற்றும் காதலனின் ஆதரவு இருப்பதால், சற்றே ஆறுதல் அடைந்துள்ளார்.

அதுமட்டுமின்றி, தன்னுடைய பிறப்பு உறுப்பு அறுவை சிகிச்சையும் இப்போதே செய்ய விரும்புகிறார். ஆனால், அதற்கு 18 வயது நிரம்பி இருக்கும் வேண்டும்.

11 வயது வரை ஆணாக மட்டுமே தன்னை அடையாளப்படுத்தி கொண்ட Zoey, ஒரே வருடத்தில் திருநங்கையாக மாறி, பிறப்பு உறுப்பு அறுவை சிகிச்சை வரை சிந்திப்பது, Sally-ஐ மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Zoey என்ன முடிவெடுத்தாலும், அவருடைய மகிழ்ச்சியே பிரதானம் என்று கூறி, அவருக்கு எப்போதும் முழு ஆதரவு கொடுக்க விரும்புவதாக Sally மனமுவந்து தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்