கொரோனா வைரஸ் 'அதனால'தான் வந்துச்சு...! 'இங்கிலாந்தில் புதிதாக பரவிய வதந்தி...' 5ஜி நெட்வொர்க் டவர்கள் தீ வைத்து எரிப்பு...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்க காரணம் 5ஜி நெட்வொர்க் டவர் தான் காரணம் என பரவிய வதந்தியால் செல்போன் கோபுரங்களுக்கு தீ வைத்த மக்களால் அதிர்ச்சி அடைந்துள்ளது தொலைத்தொடர்பு நிறுவனங்கள்.

உலகம் முழுவதும் அனைவரும் ஒன்று சேர்ந்து உச்சரிக்கும் வார்த்தை கோவிட் 19 என்னும் கொரோனா வைரஸ். வளர்ந்த நாடுகள் முதல் வளரும் நாடுகள் வரை எந்த வித பராபட்சமும் இன்றி தாக்கி வருகிறது இந்த வைரஸ். இதுவரை இந்த வைரஸிற்கு சும்மா 14 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்த நிலையில், சுமார் 80,000 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தாக்குதலால் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பரவியதற்கு காரணம் 5ஜி தொழில்நுட்பம் தான் காரணம் என்ற வதந்தி பரவி வருகிறது.

இதை நம்பிய இங்கிலாந்து மக்களில் சிலர் லிவர்பூல், வெஸ்ட் மிட்லேண்ட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட செல்போன் கோபுரங்களை மக்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் பணிபுரியும் என்ஜினீயர்களையும், ஊழியர்களையும் பொதுமக்கள் தாக்குவதாக புகார்கள் எழுந்துள்ளது.

இந்த சம்பவங்களை அடுத்து இங்கிலாந்து நாட்டு அதிகாரிகள், கொரோனா பரவுவதற்கு காரணம் 5ஜி நெட்வொர்க் என நம்புவதற்கு விஞ்ஞான ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை. மேலும் இது அறிவியலுக்கு புறம்பாக உருவாக்கப்பட்ட வதந்தி என அறிவிக்கப்பட்டுள்ளது.

செல்போன் நெட்வொர்க் கோபுரங்களுக்கு தீ வைத்த சம்பவம் தொலைத்தொடர்பு நிறுவனங்களை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்