36 வருசமா நடந்த முயற்சி.. ஒரே நாளில் தலை கீழாக மாறிய வாழ்க்கை.. "இவ்ளோ நாள் பட்ட ஆசை இன்னைக்கி பலிச்சுடுச்சு"

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்த உலகத்தில் உள்ள பல நாடுகளில், லாட்டரி டிக்கெட் விற்பனை என்பது சட்ட பூர்வமாகவே செயல்பட்டு வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | "கொஞ்ச Second'u தான்.." எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு.. மக்கள் முன்னிலையில் நேர்ந்த கொடூரம்.. கண் பார்வை பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்

அது மட்டுமில்லாமல், இந்த லாட்டரி டிக்கெட் வாங்கும் போது, பலருக்கும் அதிர்ஷ்டவசமாக பெரிய அளவிலான பரிசு தொகை அடிப்பதை கூட நாம் கேள்விப்பட்டிருப்போம்.

சமீபத்தில் கூட, கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவர், கடன் காரணமாக தனது வீட்டை விற்க தயாரான போது, லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்து அவரது வாழ்க்கையை கூட மாற்றி இருந்தது. அதே போல, துபாயில் 10 ஆண்டுகளாக கூலித் தொழிலாளியாக இருந்து வரும் இந்தியர் ஒருவருக்கும் பல லட்ச ரூபாய், லாட்டரி மூலம் விழுந்து அவரது வாழ்க்கையையே தலை கீழாக புரட்டி போட்டிருந்தது.

இப்படி துபாய், கேரளா மட்டுமில்லாமல், ஏராளமான வெளிநாடுகளில் கூட சராசரி வாழ்க்கை வாழ்ந்து வரும் நபர்கள் பலரின் வாழ்க்கை, அப்படியே லாட்டரியில் கிடைக்கும் பரிசுத் தொகை மூலம் வாழ்க்கையை புரட்டி போடுவது தொடர்பாக நிறைய செய்திகளை நாம் கேட்டிருப்போம். அந்த வகையில், தற்போது கனடா நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு லாட்டரி மூலம் கிடைத்த பரிசுத் தொகையும், அதன் பின்னால் உள்ள ஒரு கதையும் பலரது மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

கனடாவின் Scarborough என்னும் பகுதியைசிச் சேர்ந்தவர் ஸ்டீபன் டிக்ஸன். இவர் கடந்த 36 ஆண்டுகளாக ஒரே மாதிரியான லாட்டரி எண்களை கொண்டு விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. அப்படி இருக்கும் நிலையில், சமீபத்தில் lotto 6/49 ஜாக்பாட்டில், மொத்தமாக 20 மில்லியன் டாலர்களை ஸ்டீபன் பரிசாக பெற்றுள்ளார். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 100 கோடிக்கும் மேல் ஆகும்.

சுமார் 36 ஆண்டுகள் ஒரே எண்ணில் லாட்டரி எடுத்து வந்ததன் விளைவு, தற்போது இப்படி ஒரு தொகையை ஸ்டீபன் என்ற நபருக்கு அடிக்க உதவியுள்ளது. இது தொடர்பாக கடும் ஆனந்தத்தில் பேசும் ஸ்டீபன், "நான் 36 ஆண்டுகளாக விளையாடி வரும் எண் என்பது குறிப்பிட்ட குடும்ப தேதியை குறிப்பதாகும். இது பற்றி எனது மனைவியிடம் நான் தெரிவித்த போது, அவர் முதலில் 20,000 டாலர்கள் என நினைத்தார். பின்னர், 20 மில்லியன் டாலர் என நான் சொன்னதும், அவர் அதனை நம்பாமல், நான் அவரை Prank செய்வதாக நினைத்துக் கொண்டார்"என ஸ்டீபன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தனது மகன் லாட்டரி டிக்கெட் பற்றி நினைவுபடுத்திய பிறகு தான், வெற்றி பெற்றதை கண்டுபிடித்ததாக டிக்ஸன் குறிப்பிட்டுள்ளார்.

Also Read | சுரங்க பாதையில் சிக்கிய நபர்.. 8 மணி நேரத்துக்கு அப்புறம் மீட்ட 'போலீஸ்'.. "அவரு அங்க எப்படி சிக்குனாருன்னு தெரிஞ்சப்போ ஷாக் ஆயிடுச்சு"

TORONTO, MAN, LOTTERY, WINS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்