‘சிறுவனின் மண்டை ஓட்டில் இருந்த பல்’... 'காரணத்தைக் கேட்டு அதிர்ந்த மருத்துவர்கள்’!
முகப்பு > செய்திகள் > உலகம்14 வயது சிறுவனின் மண்டை ஓட்டிலிருந்து, பல் ஒன்று அகற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரரான 14 வயது சிறுவன் ஒருவன், மிகவும் ஆக்ரோஷமாக மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, தன்னுடன் விளையாடிய மற்றொரு சிறுவன் மீது மோதிக் கொண்டான். இதில் சிறுவனின் தலையில் காயம் ஏற்பட்டது. காயத்துக்குத் தையல் போட்ட நிலையில், 5 நாட்கள் கழித்து சிறுவனுக்கு காய்ச்சல் வந்துள்ளது. மேலும் தலையில் கூர்மையான வலி தோன்றியுள்ளது. அதன்பின்னர் மீண்டும் அதே மருத்துவமனைக்கு சிறுவன் சென்றான்.
அப்போது, காயம் சுத்தம் செய்யப்பட்டு, ஆன்டி பயாடிக் கொடுத்து சிறுவனை வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். 24 மணிநேரத்தில் திரும்பியும் காய்ச்சல் வந்ததுடன், காயம் வீங்கி சீல் வடியத் தொடங்கியது. இதனால் மீண்டும் மருத்துவமனை சென்றபோது, மருத்துவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். பின்னர், அந்த சிறுவன் மருத்துவமனையிலேயே சேர்க்கப்பட்டார். இவ்வாறாக 12 நாட்கள் ஆனது. பின்னர் மருத்துவர்கள் அறிவுறுத்தலின் படி, சிறுவனுக்கு சி.டி. ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது.
அதில், மண்டை ஓட்டில் கால்சியம் கட்டி அல்லது உலோகம் போன்றதொரு பொருள் சிக்கியிருப்பதை அறிந்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மூலம் அதை அகற்றினர். பின்னர் அது என்னவென்று தெரிய வந்ததையடுத்து மருத்துவர்கள் அதிர்ச்சியாயினர். மைதானத்தில் விளையாடியபோது, அந்த சிறுவனின் மீது மோதிய மற்றொரு சிறுவனின் பல் தான் அது என்று. அதை அப்படியே விட்டிருந்தால் நோய்த் தொற்று அதிகரித்து கோமா ஏற்பட்டு, உயிரிழப்பும் நேர்ந்திருக்கக்கூடும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். பின்னர் சிகிச்சை முடிந்ததும், 2 நாட்கள் கழித்து சிறுவன் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டான்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சாலையோரம் கிடந்த மின் வயரால்’.. ‘இளைஞருக்கு நடந்த பயங்கரம்’.. ‘பதைபதைக்க வைக்கும் வீடியோ’..
- 'அதுக்குனு ஒரே நைட்லயா?'.. 'இதான் சான்ஸ்னு' பெண் செய்த காரியத்தால் ஏற்பட்ட சோகம்!
- ‘காதலியின் பேச்சால்’... ‘ஆத்திரத்தில் காதலனின் வெறிச் செயல்’... ‘சிறுவனுக்கு நிகழ்ந்த விபரீதம்’... ‘நெஞ்சை உலுக்கும் சம்பவம்’!
- ‘தோழியை காப்பாற்றப்போய்’... ‘லண்டனில் கே.எஃப்.சி. முன்பு’... ‘சிறுவனுக்கு நடந்த கொடூரம்’... ‘பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்’!
- ‘நொடியில் நடந்த விபரீதம்’.. ‘கிரிக்கெட் பந்துக்கு ஆசைப்பட்ட’.. ‘4ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடூரம்’..
- ‘366 கிலோ மீட்டர், 6 மாவட்டங்கள்’.. 4 மணிநேரத்தில் கடந்து சிறுவன் உயிரை காத்த ஆம்புலன்ஸ் டிரைவர்..! குவியும் பாராட்டுக்கள்..!
- ‘பெருவெள்ளத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ்’... ‘பயமின்றி சிறுவன் செய்த செயல்‘...வைரலான வீடியோ!
- ‘சரியாக மூடாத பாதாள சாக்கடை’.. ‘நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்’.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!
- ‘மாற்றுத்திறனாளி சிறுவனை’ வீட்டிற்கு அழைத்துச் சென்று.. ‘இளம் பெண் செய்த அதிரவைக்கும் காரியம்..’
- ‘வினையில் முடிந்த விளையாட்டு..’ வீட்டில் தனியாக இருந்த.. ‘சிறுவனுக்கு நடந்த பரிதாபம்..’